Amazon ஆஃபர் சேல்.. ரூ.12,999 க்கு 9340mAh பேட்டரியுடன் OnePlus டேப்லெட்.. நச்சுனு 3 பிராண்ட்.. எந்த மாடல்கள்?
அமேசான் தளத்தில் நடக்கும் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேலில் (Amazon Mega Electronics Days Sale) ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் லெனோவோ ஆகிய பிராண்ட்களின் டேப்லெட் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் பக்காவான பீச்சர்களுடன் வெளியான 3 டேப்லெட்களின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேலில் டேப்லெட் மட்டுமல்லாமல், லேப்டாப்கள், ஹெட்போன்கள் போன்ற மாடல்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. ஏற்கனவே, விற்பனை தொடங்கிவிட்டது. டிசம்பர் 18ஆம் தேதி வரையில் ஆஃபர் கிடைக்க இருக்கிறது. இப்போது டேப்லெட்களுக்கு கொடுக்கப்பட்ட விலை, தள்ளுபடியை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள், விலை (OnePlus Pad Lite Specifications, Price): 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1 கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது.
5 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9340mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் லைட் டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட் 30 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.13,999 விலைக்கு கிடைக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
லெனோவோ ஐடியா டேப் அம்சங்கள் விலை (Lenovo Idea Tab Specifications, Price): 10.61 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2.5K ரெசொலூஷன் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளது.
2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் உள்ளது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 20W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7040mAh பேட்டரி கிடைக்கிறது. லெனோவோ டேப் பென் ஆப்ஷன் உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 5ஜி வேரியண்ட் 24 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.21,999க்கு கிடைக்கிறது. ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் அம்சங்கள் விலை (Samsung Galaxy Tab A11 Plus Specifications, Price): 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி8775 4என்எம் (Octa Core MediaTek MT8775 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன்யுஐ 8 (OneUI 8)உள்ளது.
8 எம்பி ஆட்டோ போகஸ் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7040mAh பேட்டரி கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை 23 சதவீத டிஸ்கவுண்ட் ரூ.21,499ஆக இருக்கிறது. மேலும், ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.18,999 விலைக்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








