அமேசான் முரட்டு ஆஃபர்.. கனவுல வராத ரேட்டில் OnePlus, Xiaomi டேப்லெட்கள்.. ரூ.15,249-க்கு வருது பிராண்ட் மாடல்!
அமேசான் மெகா எலக்ட்ரானிக் நாட்கள் (Amazon Mega Electronic Days) விற்பனையில் அடிமட்ட விலைக்கு ஒன்பிளஸ் (OnePlus), சியோமி (Xiaomi), லெனோவோ (Lenovo) போன்ற பிராண்ட்களில் டேப்லெட்கள் கிடைக்கின்றன. இந்த புதிய விற்பனையானது, ஜூலை 15ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஆகவே, அந்த தேதிகள் வரையில் மட்டுமே ஆஃபர்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் எந்தெந்த மாடல்கள் இருக்கின்றன? எவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் பேட் கோ அமேசான் (OnePlus Pad Go Amazon): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சியோமி பேட் 6 அமேசான் (Xiaomi Pad 6 Amazon): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் மெகா எலக்ட்ரானிக் நாட்கள் விற்பனையில் ரூ.23,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.5,000 நேரடி விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இதற்கு கார்டு ஆப்ஷன்கள் தேவையில்லை.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அமேசான் (Redmi Pad Pro 5G Amazon): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. இப்போது, ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் லம்ப்-சம்மில் ஆர்டர் செய்தால் ரூ.1,750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.23,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம்.
சியோமி பேட் 7 அமேசான் (Xiaomi Pad 7 Amazon): இந்த சியோமி டேப்லெட்டின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் மாடலின் மார்கெட் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.29,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
லெனோவோ ஐடியா டேப் ப்ரோ அமேசான் (Lenovo Idea Tab Pro Amazon): பென் பிளஸ் உடன் இந்த லெனோவோ டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,250 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ஈஎம்ஐ ஆப்ஷனுக்கு ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
லெனோவோ யோகா டேப் பிளஸ் அமேசான் (Lenovo Yoga Tab Plus Amazon): இந்த பிரீமியம் மாடலுக்கு பென் + கீபோர்ட் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.44,999ஆக இருக்கிறது. ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோன்ற பல்வேறு டேப்லெட் மாடல்களுக்கும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
இதுபோக லேப்டாப், கேமரா, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் மாடல்களுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஜூலை 15ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரையில் மட்டுமே அமேசான் மெகா எலக்ட்ரானிக் நாட்கள் விற்பனை லைவ்வில் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே, அதற்குள் ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








