வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.23,999 பட்ஜெட்ல சாதா வீடு ஆகுது ஸ்மார்ட் வீடு.. 13 எம்பி கேமரா.. ஸ்பாஷியல் ஆடியோ!
அமேசான் நிறுவனத்தின் அமேசான் எக்கோ ஷோ 11 (Amazon Echo Show 11) மற்றும் 4ஆவது ஜெனரேஷன் அமேசான் எக்கோ ஷோ 8 (Amazon Echo Show 8) மாடல்கள் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஃபுல்எச்டி டிஸ்பிளே, ஸ்பாஷியல் ஆடியோ, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்க இருக்கிறது. இந்த எக்கோ மாடல்களை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களில் எக்கோ மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்பீக்கருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, டிஸ்பிளேவுடன் களமிறங்கி வருகிறது. இதில் அடுத்த ஜெனரேஷன் மாடல்களாக இந்த அமேசான் எக்கோ ஷோ 11 மற்றும் 4ஆவது ஜெனரேஷன் அமேசான் எக்கோ ஷோ 8 மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

ஃபுல்எச்டி டிஸ்பிளே மற்றும் 13 எம்பி கேமராவுடன் வெளியாகி இருக்கின்றன. வீடியோ கால்கள், ஹோம் மானிட்டரிங், மோஷன் டிடெக்சன் மற்றும் டெம்ப்ரேச்சர் டிடெக்சனை கொடுத்துள்ளன. ஏஇசட்3 (AZ3 Pro) ப்ராசஸர் கிடைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், வூப்பர் கொடுத்துள்ளது. இதில் ஸ்பாஷியல் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
பெரிய டிஸ்பிளே கிடைப்பதால், ஓடிடி ஆப்களை கூட ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம். ஆகவே, பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடிகளை ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், வழக்கமான பாட்காஸ்ட், பிளே மியூசிக், லைவ் கேமரா ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் 4 கேமரா பீட்களை பார்த்து கொள்ளவும் முடியும்.
அமேசான் எக்கோ ஷோ 11, எக்கோ ஷோ 8 (Amazon Echo Show 11, Echo Show 8 Specifications): 10.95 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) புல்எச்டி டிஸ்பிளேவை எக்கோ ஷோ 11 மாடல் கொண்டுள்ளது. 8.7 இன்ச் (1340 x 800 பிக்சல்கள்) டிஸ்பிளேவை எக்கோ ஷோ 8 கொண்டுள்ளது. எட்ஜ் டு எட்ஜ் கிளாஸ் மற்றும் தின் பெசல் டிசைனை கொண்டுள்ளன. 13 எம்பி ஆட்டோ ஃபிரேமிங் கேமராவை கொடுத்துள்ளது.
1 வூப்பர் மற்றும் 2 ஃபுல் ரேஞ்ச் டிரைவர்கள் (Full-range Drivers) கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களில் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைத்துள்ளது. ஏஐ ஆக்சிலேட்டர் (AI Accelerator) கொண்ட ஏஇசட்3 ப்ரோ (AZ3 Pro) ப்ராசஸர் கிடைத்துள்ளது. வை-பை 6இ (Wi-Fi 6E) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. மேலும், ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டியுடன் ஏ2டிபி (A2DP) மற்றும் ஏவிஆர்சிபி (AVRCP) உள்ளது.
ஜிக்பீ (Zigbee), மேட்டர் (Matter), த்ரெட் பார்டர் ரூட்டர் (Thread Border Router) ஆகிய ஸ்மார்ட் ஹோம் ஹப் (Smart Home Hub) சப்போர்ட் கிடைத்துள்ளது. சென்சார்களை பொறுத்தவரையில், ஆம்பியன் டெப்ரேச்சர் சென்சார் (Ambient Temperature Sensor) கிடைக்கிறது. மேலும், ப்ரசென்ஸ் டிடெக்சன் மற்றும் கேமரா சென்சார் உள்ளது. அலெக்சா ஆப் (Alexa App) உள்ளது. பயர்ஓஎஸ் (Fire OS) கிடைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சப்போர்ட் கொடுக்கிறது. மைக்ரோ போன், கேமரா கன்ட்ரோல் உள்ளது. விசுவல் ஐடி (Visual ID), ப்ராக்சிமிடி டிடெக்சன், ப்ரசென்ஸ் டிடெக்சன், டெம்ப்ரேச்சர் சென்சிங் உள்ளிட்டவை உள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தியில் வாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது. 30 W பவர் அடாப்டர் சப்போர்ட் கொண்டுள்ளது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.
கிராஃபைட் (Graphite) மற்றும் கிளேசியர் ஒயிட் (Glacier White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. அமேசான் எக்கோ ஷோ 11 மாடலின் விலை ரூ.26,999 ஆக இருக்கிறது. அமேசான் எக்கோ ஷோ 8 மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








