ரூ.7,999-விலையில் அமேசான் கிண்டில் அறிமுகம்.!
அமேசான் கிண்டில் 10-வது ஜென் மாடல் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
அமேசான் நிறுவனம் தற்சமயம் பட்ஜெட் விலையில் கிண்டில் ரீடரை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று
தான் கூறவேண்டும்.

இப்போது வந்துள்ள அமேசான் கிண்டில் மாடலுக்கு கிண்டில் 10-வது ஜென் என்று பெயரிடப்பட்டுள்ளது,பின்பு படிப்பதற்கு வசதியாக ஒளியூட்டிக்கொள்ள பிரெண்ட் லைட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான்
குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் கிண்டில் மாடல்கள் மின் நூல்களை வாசிப்பதற்கான ஈ-ரீடர்களை தயாரித்து விற்பனை செய்கிறது. மேலும் ரூ.5,999 முதல் ரூ.21,999 வரை பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது.

பிரெண்ட் லைட்
மேலும் அமேசான் இப்போது அறிமுகம் செய்துள்ள கிண்டில் 10-வது ஜென் மாடலில் உள்ள மிக சிறப்பான அம்சம் என்னவென்றால், டிப்பதற்கு ஏற்ப ஒளியூட்டிக்கொள்ள பிரெண்ட் லைட் (Front light) வசதி கொண்டிருக்கிறது, இது ஒளியின் அளவை சரிசெய்துகொள்ள வசதியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6-இன்ச் டிஸ்பிளே
அமேசான் கிண்டில் 10-வது ஜென் மாடல் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இந்த கிண்டிலில் 4ஜிபி மெமரி வசதி உள்ளதால் ஆயிரக்கணக்கான மின் புத்தகங்களை டவுன்லோடு செய்து படிக்க
முடியும்.

வைஃபை
மேலும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் என்று அமேசான் நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு, வெள்ளை
கிண்டில் 10-வது ஜென் மாடல் பொறுத்தவலை கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கும், அதேபோல் இந்த சாதனத்தில் வாட்டர் ப்ரூஃப் வசதி கிடையாது. இந்த சாதனத்தின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் முன்பதிவு செய்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள முதல் நூலுக்கு 100மூ கேஷ்பேக் கிடைக்கும். இரண்டு ஆண்டுகள் கூடுதல் வாரண்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரும்
ஏப்ரல் 10-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications