ஆபரில் அடித்து நொறுக்கும் Amazon: 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம்.!

|

அமேசான் தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது Amazon Great Indian Festival sale எனும் சிறப்பு விற்பனை தான் இப்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த பல சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

குறிப்பாக ஸ்மார்ட்போன், டேப்டெல், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, பவர்பேங், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சாதனங்களை வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம். சரி இப்போது அமேசான் தளத்தில் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை விரிவாகப் பார்ப்போம்.

50-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டில்இடி டிவி (எக்ஸ்50)

50-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டில்இடி டிவி (எக்ஸ்50)

முன்பு ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 50-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டில்இடி டிவி (எக்ஸ்50) மாடலை அமேசான் தளத்தில் இப்போது ரூ.28.999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840 x 2160 பிக்சல்ஸ் உள்ளிட்ட
வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 50-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டில்இடி டிவி (எக்ஸ்50) மாடலில் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், க்ரோம்காஸ்ட் ஆதரவு, PatchWall, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

55-இன்ச் iFFALCON 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (55K72)

55-இன்ச் iFFALCON 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (55K72)

அமேசான் தளத்தில் 55-இன்ச் iFFALCON 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (55K72) மாடலுக்கு 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.28,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு (ஆர்11) இயங்குதளம்,எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த iFFALCON டிவி.

70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த Redmi: நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த Redmi: நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை

50-இன்ச் கோடாக்  4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50UHDX7XPROBL)

50-இன்ச் கோடாக் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50UHDX7XPROBL)

அமேசான் தளத்தில் 50-இன்ச் கோடாக் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50UHDX7XPROBL) மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.24,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட் டிவி 40 வாட்ஸ் ஸ்பீக்கர் வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலம் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட்,கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸட், உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த 50-இன்ச் கோடாக் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி.

55-இன்ச் Vu Premium Series 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (55UT)

55-இன்ச் Vu Premium Series 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (55UT)

அமேசான் தளத்தில் 55-இன்ச் Vu Premium Series 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (55UT) மாடலுக்கு 49 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.32,980-விலையில் வாங்க முடியும். மேலும் webOS வசதியைக் கொண்டுள்ளது இந்த Vu ஸ்மார்ட் டிவி.

இதுதவிர 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், குவாட்-கோர் பிராசஸர், எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான 55-இன்ச் Vu Premium Series 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (55UT) மாடல்.

50-இன்ச் ஏசர் I Series 4கே ஸ்மார்ட் டிவி (AR50AR2851UDFL)

50-இன்ச் ஏசர் I Series 4கே ஸ்மார்ட் டிவி (AR50AR2851UDFL)

முன்பு ரூ.40,990-க்கு விற்பனை செய்யப்பட்ட 50-இன்ச் ஏசர் I Series 4கே ஸ்மார்ட் டிவி (AR50AR2851UDFL) மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 30 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், 64-பிட் குவாட்-கோர், பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த எசர் ஸ்மார்ட் டிவி மாடல்.

55-இன்ச் Onida 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (55UIF)

55-இன்ச் Onida 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (55UIF)

அமேசான் தளத்தில் 55-இன்ச் Onida 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி ((55UIF) மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.32,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1.9ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1.5ஜிபி ரேம், எச்டிஆர் பிளஸ், எச்எல்ஜி, க்ரோம்காஸ்ட் ஆதரவு, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

50-இன்ச் டிசிஎல் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50P615)

50-இன்ச் டிசிஎல் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50P615)

அமேசான் தளத்தில் 50-இன்ச் டிசிஎல் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50P615) மாடலுக்கு 56 சதவீதம் தள்ளபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மாரட் டிவியை ரூ.27,999-விலையில் வாங்க முடியும். மேலும் 24 வாட்ஸ் ஸ்பீக்கர், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி
இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
Amazon is offering 61 percent off on 50-inch and 55-inch Smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X