Home
Gadgets

ஆளுக்கு 1 வாங்கும் விலை.. 2ஜிபி ரேம், வைஃபை 6.. சாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் அமேசான் 4K ஸ்டிக்..

அமேசான் நிறுவனம் அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே (Amazon Fire TV Stick 4K) மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே அம்சங்கள் (Amazon Fire TV Stick 4K Features): 2ஜிபி ரேம் வசதியுடன் இந்த அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே மாடல் வெளிவந்துள்ளது. இதன் முந்தைய மாடல் 1.5ஜிபி ரேம் வசதியை மட்டும் வழங்கியது. 4கே அல்ட்ரா எச்டி இமேஜ் குவாலிட்டி (4K Ultra HD image quality),டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10+ (HDR10+), எச்டிஆர் (HDR), எச்எல்ஜி(HLG) போன்ற ஆதரவுகளை வழங்குகிறது இந்த ஃபையர் டிவி ஸ்டிக் 4கே சாதனம்.

சாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் அமேசான் 4K ஸ்டிக்.. விலை?

அதுவும் பழைய எல்இடி டிவி முதல் தற்போது உள்ள QLED ஸ்மார்ட் டிவி ((QLED Smart TV)வரை அனைத்து மாடல்களில் இந்த அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே சாதனத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த சாதனத்தைப் பொருத்துவதன் மூலம் சிறந்த திரை அனுபவம் மற்றும் சிறந்த ஆடியோவை பெறமுடியும்.

அதேபோல டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே மாடல். எனவே இதன் மூலம் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும். மேலும் அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் ஆதரவு இதனுடன் வருகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அமேசான்.

அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே ஆனது வைஃபை 6 கனெக்டிவிட்டி ஆதரவுடன் வருகிறது. மேலும் இது 5GHz மற்றும் 2.4GHz Wi-Fi பேண்டுகளுக்கான ஆதரவை வழங்குகிறது. அல்ட்ரா-சினிமாட்டிக் வீடியோ கன்டென்ட் வழங்குகிறது அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே சாதனம். இதன் மூலம் ஹை Performance ஸ்ட்ரீமிங்கை வீட்டிலேயே அனுபவிக்க முடியும்.

சக்திவாய்ந்த 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் (1.7GHz quad-core processor) ஆதரவுடன் இந்த அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே மாடல். வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். நெட்பிளிக்ஸ் Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (YouTube)போன்ற ஆப்ஸ்களை இதில் பயன்படுத்த முடியும்.

சாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் அமேசான் 4K ஸ்டிக்.. விலை?

இதுதவிர ஆப்ஸ் ஸ்டோர் (Appstore) வழியாக 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்ட அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே மாடல் ஆனது முந்தைய மாடலை விட 30% அதிக சக்தி வாய்ந்தது. குறிப்பாக கேம்களுக்கான அதிவேக கிராபிக்ஸ் ஆதரவை வழங்குகிறது அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே மாடல்.

குறிப்பாக அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே மாடலின் விலை ரூ.5,999-ஆக உள்ளது. அமேசான், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த புதிய அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே சாதனம் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் இது வழங்குவதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon has launched the new Fire TV Stick 4K in India: check specifications, price, availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X