தெறி டிஸ்கவுண்ட்.. Phone-க்கு ரூ.11000.. Soundbar-க்கு ரூ.20000.. Tablet-க்கு ரூ.7000.. Amazon Summer Sale-ல்!
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) ஆனது, 2026 ஆம் ஆண்டிற்கான அதன் அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale 2026) ஆனது எப்போது தொடங்கும் என்கிற தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் இந்த வருடாந்திர விற்பனை நிகழ்வானது, இந்த முறையும் - ஸ்மார்ட்போன்கள் (Smartphones), லேப்டாப்கள் (Laptops), ஃபேஷன் (Fashion) மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் (Home appliances) உள்ளிட்ட பல பிரிவுகளில் கவர்ச்சிகரமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்க உள்ளது.

வழக்கம் போல இந்த விற்பனையிலும் அமேசான் பிரைம் மெம்பர்கள் முன்கூட்டிய அணுகலை பெறுவார்கள். அதாவது இந்த விற்பனையை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள். மற்ற (நான்-பிரைம் மெம்பர்களுக்கு) வாடிக்கையாளர்களுக்கு முன்பாகவே நேரடி விலை குறைப்புகள், வங்கி சலுகைகள் மற்றும் தொகுப்பு சலுகைகளை அணுகுவார்கள்.
அமேசான் கிரேட் சம்மர் சேல் எப்போது தொடங்கும்? என்னென்ன பேங்க் ஆபர்கள் கிடைக்கும்? அமேசானின் கிரேட் சம்மர் சேல் ஆனது மே 8 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும். ஆக பிரைம் சந்தாதாரர்களுக்கான முன்கூட்டிய அணுகல் மே 7 ஆம் தேதியே கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த விற்பனையின் போது, வாங்குபவர்கள் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது அல்லது ஈஸிஇஎம்ஐ (EASYEMI) பரிவர்த்தனைகளை தேர்ந்தெடுக்கும்போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். பிரைம் மெம்பர்களுக்கு அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 10 சதவீத நிலையான சேமிப்பும், வரம்பற்ற 5 சதவீத கேஷ்பேக்கும் கிடைக்கும்
மேலும் அமேசான் வலைத்தளமானது, நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் வழங்கும். இது அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்குவதை எளிதாக்கும். பிரைம் மெம்பர்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு கூடுதலாக 3 சதவீத தள்ளுபடி உட்பட, மேலும் பல கூடுதல் பலன்களை பெறுவார்கள். இதோடு எக்ஸ்சேஞ்ச் திட்டங்கள், டிஜிட்டல் கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.
என்னென்ன தயாரிப்புகள் மீது ஆபர் கிடைக்கும்? அமேசான் இந்தியாவானது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் மீதான தள்ளுபடிகளுடன், சில ஆரம்பகட்ட சலுகைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. உதாரணமாக, வாடிக்கையாளர்கள் ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8) மாடலை அதன் பட்டியல் விலையான ரூ.37,999 இல் இருந்து குறைத்து ரூ.30,999 க்கு வாங்கலாம்.
இதேபோல ரூ. 53,999 க்கு பட்டியலிடப்பட்ட ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் ரூ.42,999 க்கு கிடைக்கும். ஜேபிஎல் 800 ப்ரோ சவுண்ட்பார் (JBL 800 Pro Soundbar) அதன் பட்டியல் விலையான ரூ. 69,999 இல் இருந்து குறைத்து ரூ 49,999 க்கு வாங்க கிடைக்கும். இப்படி பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வாடிக்கையாளர்களின் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்த, அமேசான் தனது ஏஐ-பவர்டு அசிஸ்டென்ட் ஆன ரூஃபஸை (Rufus) முன்னிலைப்படுத்துகிறது. இது "ரூ.2,000-க்கும் குறைவான சிறந்த சலுகைகள்" போன்ற அறிவுறுத்தல்கள் மூலம், பயனர்கள் சலுகைகளையும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளையும் கண்டறிய உதவும்.
பயனர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில், இது 30 முதல் 90 நாட்கள் வரையிலான விலை வரலாற்றை அணுகும் வசதியையும் வழங்குகிறது. இறுதியாக, "உங்கள் அறையில் காண்க" (View in Your Room) என்கிற அம்சம், வாடிக்கையாளர்கள் - வீட்டு உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்குவதற்கு முன்பு, அவற்றை தங்கள் சொந்த இடத்தில் இருப்பது போல காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. இது விற்பனை காலத்தில் வேகமான மற்றும் அதிக நம்பிக்கையான வாங்கும் முடிவுகளை எடுக்க உதவும் என்று அமேசான் நம்புகிறது.


Click it and Unblock the Notifications