சும்மா சில்லு.. சில்லுனு ஆஃபர் போட்ட அமேசான்.. கம்மி விலையில் சிறந்த ஏர் கூலர்.. வீட்டுக்கு 1 தூக்குங்க..
கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதுவும் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சில இடங்களில் 112 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏசி (AC), ஏர் கூலர்கள் (Air Coolers ), மினி ஏசி (mini ac) போன்ற சாதனங்களை மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் ஏசி, ஏர் கூலர்கள், மினி ஏசி போன்ற சாதனங்களுக்குத் தள்ளுபடி அறிவித்துள்ளது.

குறிப்பாக இப்போது அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024) எனும் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஏர் கூலர் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்
சிம்பொனி ஐஸ் கியூப் 27 பெர்சனல் ஏர் கூலர் (Symphony Ice Cube 27 Personal Air Cooler) மாடலுக்கு அமேசான் தளத்தில் 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,791 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.579 தள்ளுபடியும் உள்ளது.
சிம்பொனி ஐஸ் கியூப் 27 பெர்சனல் ஏர் கூலர் ஆனது i-PURE தொழில்நுட்பம், 27 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி, மல்டிஸ்டேஜ் ஃபில்டர், பவர் ஃபுல் ஃபேன், தேன்கூடு பட்டைகள்(honeycomb pads) உள்ளிட்ட பல சிறப்பு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஏர் கூலர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
வி-கார்டு அரிடோ டி35 எச் ஏர் கூலர் (V-Guard Arido T35 H Air Cooler) மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ரூ.8,071 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.807 தள்ளுபடி கிடைக்கும்.
குறிப்பாக வி-கார்டு அரிடோ டி35 எச் ஏர் கூலர் மோட்டார் மற்றும் பம்ப் மீது இரண்டு வருட வாரண்டி உள்ளது. அதேபோல் 1300 m³/h ஏர் டெலிவரி, 4D Air Circulation, 35 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான வி-கார்டு அரிடோ டி35 எச் ஏர் கூலர் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
HAVAI Thunder 75 கூலர் (HAVAI Thunder 75 Cooler) மாடலுக்கு அமேசானில் 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனம் ரூ.7,580 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.758 தள்ளுபடியும் உள்ளது.
HAVAI Thunder 75 கூலர் ஆனது 75 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி, 12 இன்ச் பிளேட், 1200 ஆர்பிஎம், 3 ஸ்பீடு ஆப்ஷன், 3 வே ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டேங்க்-ஐ முழுவதும் நிரப்பினால் 15 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஹாவெல்ஸ் Celia55எல் ஏர் கூலர் (Havells Celia 55L Air Cooler) மாடலுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனம் தற்போது ரூ.10,989 விற்பனை செய்யப்படுகிறது.. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1,098 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.9891 இருந்தால் போதும் இந்த ஹாவெல்ஸ் Celia 55எல் ஏர் கூலர் மாடலை வாங்கிவிட முடியும்.
3500 m3/h ஏர் டெலிவரி,4 லீப் அலுமினியம் பிளேடு ஃபேன், 55 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த ஹாவெல்ஸ் Celia 55எல் ஏர் கூலர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹாவெல்ஸ் நிறுவனம்.
AK DIAMOND மினி கூலர் (AK DIAMOND Mini cooler) மாடலுக்கு அமேசானில் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.849 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறிய வகை கூலர் ஆனது பில்ட்-இன் வீல், யுஎஸ்பி போர்ட், டாப் ஃபில் டேங்க் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக இதை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications