Home
Gadgets

அடித்து ஆடும் அமேசான்.. 200 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. நம்ப முடியாத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது great summer sale 2026 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த மாடல் 4கே சப்போர்ட் உடன் அறிமுகமானது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல் இந்தியாவில் ரூ.10,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ப்ரொஜெக்டர் மாடல் ரூ,9990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அடித்து ஆடும் அமேசான்.. நம்ப முடியாத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்..

Wzatco யுவா போல்ட் அம்சங்கள் (Wzatco Yuva Bolt projector Specifications): Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. அதேபோல் இதில் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

11000 லுமன்ஸ் பிரைட்னஸ் (lumens brightness) வசதி உள்ளது. ஆகவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, இது தூசி படிவதைத் தடுக்கவும். வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 90 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

குறிப்பாக ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அலைன்மெண்ட் (Auto Alignment), ஜூம், டிஜிட்டல் போகஸ் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மிராகாஸ்ட் (Miracast), ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.

அடித்து ஆடும் அமேசான்.. நம்ப முடியாத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்..

மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா போல்ட் மாடல் வெளிவந்துள்ளது. இந்த ப்ரொஜெக்டர் மாடலில் 50,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஆண்ட்ராய்டு 12.0 (Android 12.0) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பில்ட் இன் டூயல் 3W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale: 4K Support Wzatco Yuva Bolt Available at Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X