40-இன்ச் ஸ்மார்ட் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய அமேசான்.!
அமேசான் தளத்தில் Amazon Great Republic Day Sale 2023 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

40-இன்ச் டிசிஎல் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி
குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் டிசிஎல் நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 40-இன்ச் டிசிஎல் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவிக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது டிவிக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

59 சதவீதம் தள்ளுபடி
அதாவது 40-இன்ச் டிசிஎல் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.40,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு தரமான ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.

ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி
இந்த 40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி, 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குவாட் கோர் பிராசஸர்
40-இன்ச் டிசிஎல் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவியில் 64-பிட் குவாட் கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. எனவே நீங்கள் நினைத்த ஆப் வசதியை இதில் பயன்படுத்த முடியும்.

டால்பி ஆடியோ ஆதரவு
இந்த 40-இன்ச் டிசிஎல் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இவை சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி எச்டிஆர் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ஸ்டோரேஜ் வசதி
குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த 40-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

சன் என்எக்ஸ்டி-யூடியூப்
நெட்ஃபிக்ஸ், கூகுள் பிளேஸ்டோர், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சன் என்எக்ஸ்டி, யூடியூப் உள்ளிட்ட பல ஆப் வசதிகளை இந்த 40-இன்ச் டிசிஎல் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








