ஆஃபர்னா இதுதான்யா ஆஃபர்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. கம்மி விலையில் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்குத் தள்ளுபடி அறிவித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவிக்கு தான் 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.32,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த டிவியை ரூ.19,999 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.750 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவியின் (Acer Advanced I Series Full HD Smart LED Google TV) சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சக்திவாய்ந்த குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், எல்ஜி நிறுவனங்களின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி சற்று உயர்வான விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஏசர் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








