Home
Gadgets

கூவி, கூவி ஆஃபர் கொடுக்கும் அமேசான்.. கூகுள் டிவி ஓஎஸ்.. 120 இன்ச்.. 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival 2026 Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ப்ரொஜெக்டர்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் Wzatco நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

முன்பு Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த ப்ரொஜெக்டர் மாடல் ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.17,990 விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி, கூவி ஆஃபர் கொடுக்கும் அமேசான்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Wzatco Yuva Infinity Google TV Projector Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இதில் எச்டிஆர் 10 பிளஸ் ( HDR10+) வசதி உள்ளன. குறிப்பாக இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

1200 ஏஎன்எஸ்ஐ (1200 ANSI) லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

180 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, இது தூசி படிவதைத் தடுக்கவும், வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

கூவி, கூவி ஆஃபர் கொடுக்கும் அமேசான்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். டால்பி டிஜிட்டல் MS12 ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

குறிப்பாக 2ஜிபி ரேம் வசதி இதில் உள்ளது. மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2026: WZATCO Yuva Infinity Google TV Projector Gets 62 percent Off
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X