அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் இப்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் WZATCO யுவா பிளேஸ் (WZATCO Yuva Blaze) ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் WZATCO யுவா பிளேஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,480 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா பிளேஸ் அம்சங்கள் (Wzatco Yuva Blaze Specifications): Wzatco யுவா பிளேஸ் மாடல் ஆனது 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் (HDR), எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் இந்த மாடலில் உள்ளன.
Wzatco யுவா பிளேஸ் மாடலில் 1000 ANSI பிரைட்னஸ் வசதி உள்ளது. எனவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளை இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமாகவும், தெளிவாகப் பார்க்க முடியும். மேலும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Wzatco நிறுவனம்.
270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா பிளேஸ் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் Wzatco யுவா பிளேஸ் ப்ரொஜெக்டர் மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் டிவியை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது Wzatco யுவா பிளேஸ் மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா பிளேஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

Hi-Fi ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே Wzatco யுவா பிளேஸ் மாடலில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளன
யுஎஸ்பி (USB) போர்ட்,எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா பிளேஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் ( Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
