Home
Gadgets

அமேசான் சேல் 2026.. 44 சதவீத ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ (E Gate Duster 5X Pro) ப்ரொஜெக்டர் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் சேல் 2026.. 44 சதவீத ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ அம்சங்கள் (E Gate Duster 5X Pro Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல். மேலும் இதில் எச்டிஆர் பிளஸ் (HDR +) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன.

இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் 500 ஐஎஸ்ஒ லுமன்ஸ் ( 500 ISO Lumens ) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு மிகவும் அருமையாக உள்ளது.

ஆம்லாஜிக் 950D4 மற்றும் குவாட் கோர் பிராஸசர் உடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரொஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 150 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன இந்த சாதனத்தில்.

அமேசான் சேல் 2026.. 44 சதவீத ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். 10W பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

அதேபோல் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2026: E Gate Duster 5X Pro Projector Gets 44 percent Off
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X