Home
Gadgets

புரட்டாசியில் புரட்டி போட்ட அமேசான்.. 8K சப்போர்ட்.. 120 இன்ச்.. கம்மி விலையில் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 எனும் சிறப்பு விற்பனை இன்று தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் டிவி, மொபைல், ஏசி, புரொஜெக்டர், லேப்டாப், டேப்லெட், உள்ளிட்ட பல சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் 8K சப்போர்ட் கொண்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் புரொஜெக்டர் (Portronics Beem 500 Smart LED Projector) மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

புரட்டாசியில் புரட்டி போட்ட அமேசான்.. கம்மி விலையில் புரொஜெக்டர்..

போர்ட்ரானிக்ஸ் பீம் 500 புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 500 Projector Specifications): போர்ட்ரானிக்ஸ் பீம் 500 புரொஜெக்டர் 8K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் மற்றும் 1080பிக்சல் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்கமுடியும். 8K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் உள்ளதால் வேற லெவல் வீடியோ குவாலிட்டி கிடைக்கும்.

தரமான அம்லாஜிக் டி972 சிப்செட் (Amlogic T972 Chipset) உடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அம்லாஜிக் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் 16W பில்ட்-இன் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான புரொஜெக்டர். எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் கண்ட்ரோல் (Voice Enabled Remote Control) கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.

6700 லூமென்ஸ் எல்இடி லேம்ப் (6700 Lumens LED lamp) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection)செய்து கொள்ள முடியும். எனவே இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த சாதனத்தில் உள்ளது.

கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். மேலும் ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps) வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே ஒடிடி-இல் வெளியாகும் புதிய படங்களை இதன் உதவியுடன் சிறந்த தரத்தில் பார்க்க முடியும்.

புரட்டாசியில் புரட்டி போட்ட அமேசான்.. கம்மி விலையில் புரொஜெக்டர்..

புளூடூத், வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு 9 (Android 9) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. பின்பு முழுமையாகச் சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் என்ஜின் வடிவமைப்பு கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 500 புரொஜெக்டர்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. பெஸ்ட் ஸ்கிரீனிங் அனுபவத்துக்காக இன்டலிஜென்ஸ் ஆட்டோமேட்டிக் அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் (Intelligent Automatic Obstacle Avoidance) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2025: Portronics Beem 500 Smart Projector gets 56 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X