Home
Gadgets

இறங்கி அடித்த அமேசான்.. Samsung 4கே டிவி மீது நம்ப முடியாத விலை குறைப்பு.. Q-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவிக்கு (Samsung 43 inch Crystal 4K Vista Ultra HD Smart LED TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவிக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாம்சங் 4கே டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Samsung 4கே டிவி மீது நம்ப முடியாத விலை குறைப்பு.. எந்த மாடல்?

சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவி அம்சங்கள் (Samsung 43 inch Crystal 4K Vista TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேலில் 3840 x 2160 பிக்சல்ஸ், 50Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களுடன் இந்த சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

ஒன் யுஐ டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 43 இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.

இதுதவிர ஏர்பிளே (AirPlay) சப்போர்ட், கரோக்கி மைக் (Karaoke Mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch), வொர்க் அவுட் டிராக்கர் (Workout Tracker) சப்போர்ட், ஐஓடி-சென்சார் ( IoT-Sensor) உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த சாம்சங் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

Samsung 4கே டிவி மீது நம்ப முடியாத விலை குறைப்பு.. எந்த மாடல்?

கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவி வெளிவந்துள்ளது.

எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2025: 39 percent discount on Samsung 43 inch Crystal 4K Vista TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X