ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?

|

புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது எவ்வளவு செலவாகும்? என்ன ஒரு 6000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகலாம் என்று நாம் கூற முடியும். அதே, ஒரு புது ஸ்மார்ட்போனை டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் வாங்க வேண்டும் என்றால் குறைந்த 15,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால், ஸ்மார்ட்போனை விட பெரிய டிஸ்பிளேவுடன் இயங்க கூடிய, Nokia T10 டேப்லெட் சாதனத்தை நீங்கள் வெறும் ரூ.12,000 விலைக்குள் வாங்க முடியும் என்று நாங்கள் சொன்னால் நம்புவீர்களா?

ரூ.12,000 விலைக்குள் தரமான டேப்லெட் வாங்கலாமா?

ரூ.12,000 விலைக்குள் தரமான டேப்லெட் வாங்கலாமா?

சொன்னாலும், சொல்லாவிட்டாலும், அது தான் உண்மை. ரூ.12,000 விலைக்குள் தரமான அம்சங்களுடன் வெளியாகத் தயாராகக் காத்திருக்கும் நோக்கியாவின் புதிய டேப்லெட் சாதனத்தை மிகக் குறைந்த விலையில் வாங்க இந்தியர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு நெருங்கி வருகிறது. ஆம், நோக்கியா நிறுவனம் Nokia T10 என்ற டேப்லெட் மாடலை இந்த ஆண்டு ஜூலை மாதம் உலக சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் பக்கத்தில் வெளியான Nokia T10 விலை தகவல்

அமேசான் பக்கத்தில் வெளியான Nokia T10 விலை தகவல்

இந்த புதிய டேப்லெட் சாதனத்தை நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால், இந்த Nokia T10 டேப்லெட் இந்தியாவின் நோக்கியா தளத்தில் காணப்படுவதற்கு முன்பாகவே, அமேசான் இந்தியாவில் ஒரு போஸ்டரில் காணப்பட்டுவிட்டது. அதிலும், குறிப்பாக, அறிமுகத்திற்கு ரெடியாகும் இந்த நோக்கியா T10 டேப்லெட்டின் விலையுடன் இந்த போஸ்டர் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போனா இல்ல வேற எதுவுமா? Tecno Camon 19 Pro Mondrian மீது அட்டகாச தள்ளுபடி.!இது போனா இல்ல வேற எதுவுமா? Tecno Camon 19 Pro Mondrian மீது அட்டகாச தள்ளுபடி.!

 ரூ.11,999 விலையில் இந்தியாவில் அறிமுகமாகிறதா?

ரூ.11,999 விலையில் இந்தியாவில் அறிமுகமாகிறதா?

நோக்கியா டி10 இன்னும் நோக்கியா இந்தியாவின் இணையதளத்திலோ அல்லது அமேசான் இந்தியாவிலோ பட்டியலிடப்படவில்லை. இருப்பினும், அமேசானின் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் 2022 டேப்லெட்டுகளுக்கான லேண்டிங் பக்கத்தில் ரூ.11,999 விலையில் T10 குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த Nokia T10 டேப்லெட் ஐரோப்பாவில் Wi-Fi மற்றும் Wi-Fi + 4G வகைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்த டேப்லெட்டின் 2 மாடல்களும் இந்தியா பெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நோக்கியா T10 டேப்லெட் டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

நோக்கியா T10 டேப்லெட் டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

நோக்கியா T10 டேப்லெட் சாதனம் 1280 x 800 பிக்சல்கள் கொண்ட 8' இன்ச் அளவு உடைய LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் Netflix HD-க்கு சான்றளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Nokia T10 சாதனம் Unisoc T606 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 2 வருட OS அப்டேட் மற்றும் 3 வருட, மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்டை தடையில்லாமல் பெரும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.

OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

Nokia T10 டேப்லெட் ஸ்டோரேஜ் விபரம்

Nokia T10 டேப்லெட் ஸ்டோரேஜ் விபரம்

இந்த Nokia T10 டேப்லெட் சாதனத்தின் ஸ்டோரேஜ் பற்றிப் பார்க்கையில், இது 3ஜிபி / 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பம் 32ஜிபி / 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Nokia T10 டேப்லெட் மைக்ரோ எஸ்டி கார்டைச் சேர்ப்பதற்கான ஹைப்ரிட் சிம் ஸ்லாட் உடன் வருகிறது. உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் ஸ்டோரேஜை SD கார்டு மூலம் நீங்கள் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

Nokia T10 டிவைஸின் கேமரா அம்சம்

Nokia T10 டிவைஸின் கேமரா அம்சம்

இது USB-C போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவுடன் இயங்கும் 5,250mAh பேட்டரியை பேக் செய்கிறது. Nokia T10 டிவைஸின் கேமரா அம்சம் பற்றிப் பேசுகையில், இது 2 மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன், ஆட்டோஃபோகஸ் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளது. OZO ஆடியோ பிளேபேக் கொண்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர், Wi-Fi 802.11ac, புளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற மற்ற அம்சங்களையும் Nokia T10 கொண்டுள்ளது. இது ஓஷன் ப்ளூ நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Amazon Great India Festival 2022 Landing Page Mentions Nokia T10 India Price Before Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X