வாய்ப்பில்ல ராஜா.. இதை விட கம்மி விலையில் கிடைக்காது.. ஆஃபரில் ஸ்மார்ட் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?
தற்போது அமேசான் (Amazon) வலைத்தளத்தில் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Great Freedom Festival Sale 2024)என்கிற சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 (Portronics Beem 410) ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 (Portronics Beem 410) மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1249 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.11250 இருந்தால் போதும் இந்த ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலை வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 அம்சங்கள் (Portronics Beem 410 Specifications): இது ஒரு தரமான எல்இடி (LED) ஸ்மார்ட் புரொஜெக்டர் ஆகும். 1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டரில் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) உள்ளது.
குறிப்பாக 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
6W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் ஆதரவு கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்தது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இதில் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் இதில் உள்ளன. அதேபோல் இந்த புரொஜெக்டர் மாடலை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.
1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. அதேபோல் ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வை - பை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) கூட உள்ளது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் வாங்கக் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக புரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








