இறங்கி அடித்த அமேசான்.. ரூ.12,600 போதும்.. 200 இன்ச்.. ஆஃபரில் LED ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 (Portronics Beem 460) ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த அசத்தலான புரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1399 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலை ரூ.12,600 இருந்தால் தற்போது வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 அம்சங்கள் (Portronics Beem 460 Specifications): இது எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ்(Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடல்.
மேலும் இதில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) ஆதரவு கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடல். குறிப்பாக இதில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) ஆகியவற்றை கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
குறிப்பாக கேமிங் கன்சோல் (gaming console) ஹார்டு டிரைவ் (Hard Drive) உள்ளிட்ட பல ஆதரவுகள் இந்த புரொஜெக்டர் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளிட்ட சிறப்பான வசதிகளும் இதில் உள்ளது. மேலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் (bluetooth connectivity) இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக வனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலில் 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த எல்இடி புரொஜெக்டர் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த அமேசான் சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








