Home
Gadgets

யோசிக்காம வாங்கலாம்.. 30W ஸ்பீக்கர்கள்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. கம்மி விலையில் 40-இன்ச் டிவி.. அமேசான் அதிரடி.!

ஏசர் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பான இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் அசத்தலான ஏசர் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை இருக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான 40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவிக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

16ஜிபி ஸ்டோரேஜ்.. கம்மி விலையில் 40-இன்ச் டிவி.. அமேசான் அதிரடி.!

அதாவது 40-இன்ச் ஏசர் ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி(Acer I Series Full HD Smart LED Google TV) ஆனது முன்பு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் இந்த 40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவியை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

40-இன்ச் ஏசர் ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது 1080 பிக்சல் ரெசல்யூஷன், 600 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. எச்டிஆர் 10 ஆதரவு, சூப்பர் ப்ரைட்நஸ், 16.7 மில்லியன் கலர்ஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

இந்த 40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக 40-இன்ச் ஏசர் ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த 40-இன்ச் ஏசர் ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூகுள் டிவி இயங்குதளம் (ஓஎஸ்) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ் பில்ட்-இன், கூகுள் பிளே போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. மேலும் இந்த டிவியில் 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளன. எனவே இந்த அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி ஸ்டோரேஜ்.. கம்மி விலையில் 40-இன்ச் டிவி.. அமேசான் அதிரடி.!

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ், ஜியோ சினிமா, சோனிலிவ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஹங்காமா உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த 40-இன்ச ஏசர் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஏசர் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் வைஃபை, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 40-இன்ச் ஏசர் ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி. மேலும் குறைந்த விலையில் அசத்தலான அம்சங்களுடன் 40-இன்ச் ஏசர் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

மேலும் ஏசர் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்களுக்குப் போட்டியாக பட்ஜெட் விலையில் ஏசர் நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival Sale: 40-inch Acer Smart TV is available at 40 percent off: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X