அமேசான் சேல்.. ரூ.17,999 பட்ஜெட்ல Hisense டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 43E5Q என்ற மாடல் நம்பர் கொண்ட ஹைசென்ஸ் 43 இன்ச் ஈ5கியூ சீரிஸ் ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (Hisense 43 inch E5Q Series Smart QLED Google TV) மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17999 விலையில் வாங்கிவிட் முடியும்.

ஹைசென்ஸ் 43 இன்ச் ஈ5கியூ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Hisense 43 inch E5Q Series Smart QLED Google TV Specifications): ஃபுல் எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 1920*1080 பிக்சல்ஸ், 330 நிட்ஸ் ப்ரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் எச்டிஆர் 10 (HDR 10) ஆதரவு, சூப்பர் பிரைட் பேனல் (Super Bright Panel) உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் பெசல்-லெஸ் (Bezel-less) டிசைன் உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஹைசென்ஸ் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் ( Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
குறிப்பாக டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஈ5கியூ சீரிஸ் ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் உடன் வருகிறது இந்த டிவி. அதேபோல் வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஏவி இன்புட், ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், டிஜிட்டல் ஆடியோ அவுட், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹைசென்ஸ் ஈ5கியூ சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
குரோம்காஸ்ட் ஆதரவு இந்த ஹைசென்ஸ் 43 ஈ5கியூ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








