4K டிவைஸ்.. 12000 ஆப்ஸ்.. சாதாரண Smart TV-யே சூப்பர் ஸ்மார்ட் டிவியா மாறும்.. Amazon Fire Stick விலை என்ன?
அமேசான் (Amazon) நிறுவனம் இன்று அதன் அடுத்த தலைமுறை புது அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே (Amazon Fire TV Stick 4K) சாதனத்தை வைஃபை 6 ஆதரவுடன் அறிமுகம் செய்துள்ளது. இது அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் வருகிறது.
இந்த புதிய அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே (Amazon Fire TV Stick 4K) கையடக்க ஸ்மார்ட் டிவைஸ், உங்கள் சாதாரண ஸ்மார்ட் டிவி சாதனத்தை சூப்பர் ஸ்மார்ட் டிவியாக மாற்றும் திறன் கொண்டது. உங்களிடம் பழைய LED டிவி (LED TV) அல்லது புதிய QLED ஸ்மார்ட் டிவி (QLED Smart TV) என்று எந்த பிராண்டட் ஸ்மார்ட் டிவியாக இருந்தாலும், இந்த சாதனத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே (Amazon Fire TV Stick 4K):
இந்த புதிய அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே டிவைஸ் இந்திய சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அல்ட்ரா எச்டி படத் தரம் (Ultra HD picture quality), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10+ (HDR10+) மற்றும் அலெக்ஸா வாய்ஸ் அஸிஸ்டனட்ஸ் (Alexa voice assistant) ஆதரவு போன்ற பல அம்சங்களை அதன் பயனர்களுக்கு அனுபவிக்க அனுமதிக்கிறது.
புதிய Fire TV Stick 4K ஆனது லோ-பவர் மோட் (low-power mode) ஆதரவையும் கொண்டுள்ளது. இது தவிர, ஆப்ஸ்டோர் வழியாக சுமார் 12,0000-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. புதிய Amazon Fire TV Stick 4K இன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். புதிய அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே சாதனம் தற்போது ரூ. 5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது முன்கூட்டிய ஆர்டருக்கு வாங்க கிடைக்கிறது. இந்த புதிய அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் 4கே சாதனம் வருகின்ற மே 13, 2024 ஆம் தேதி முதல் ஷிப்பிங் செய்யத் தொடங்கும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance digital), விஜய் சேல்ஸ் (Vijay sales) மற்றும் க்ரோமா (Chroma) வழியாக வாங்கவும் கிடைக்கும்.

இதை எப்படி ஸ்மார்ட் டிவியில் இணைத்து இயக்குவது? (How to connect Amazon Fire TV Stick 4K to a Smart TV):
Amazon Fire TV Stick 4K சாதனமானது 1.7 GHz குவாட் கோர் பிராசஸர் (Quad core processor) மூலம் இயக்கப்படுகிறது. இது வைஃபை 6 (Wi-Fi 6) இணக்கமான ரவுட்டர்கள், 5GHz மற்றும் 2.4GHz Wi-Fi பேண்டுகளுக்கான ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, இது அல்ட்ரா எச்டி படத் தரம், டால்பி அட்மோஸ், டால்பி விஷன், எச்டிஆர்10+ மற்றும் பலவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த Amazon Fire TV Stick 4K ஆனது Alexa Voice Remote ஆதரவை உள்ளடக்கியுள்ளது. இதில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்ஃபிலிக்ஸ் (Netflix), ஜீ5 (Zee5) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) போன்ற பயன்பாடுகளின் பயன் கிடைக்கும். இத்துடன் ஆப்ஸ் ஸ்டோர் (Appstore) வழியாக 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications








