Home
Gadgets

அமேசான் மிரளுது.. நச்சுனு 85 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக அமேசான் நிறுவனத்தின் ஃபயர் டிவி ஓம்னி மினி-எல்இடி சீரிஸ் (Amazon Fire TV Omni Mini-LED Series) களமிறங்கி இருக்கின்றன. டால்பி விஷன் ஐகியூ மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் மற்றும் சப்வூப்பர் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஃபயர் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் பட்டையை கிளப்புகிறது. இந்த அமேசான் ஃபயர் டிவி ஓம்னி மினி-எல்இடி சீரிஸ் மாடல்களில் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த மினி எல்இடி சீரிஸ் மாடல்களில் ஏஐ அட்ஜஸ்ட்மென்ட் பிக்சர் அவுட்புட் கொடுக்கும் இன்டெலிஜென்ட் பிக்சர் டெக்னாலஜி (Intelligent Picture Technology) சப்போர்ட் வருகிறது. இதன் மூலம் சினிமா, ஸ்போர்ட்ஸ், கேமிங் போன்றவற்றின் போது ரியல் டைமில் பெஸ்ட் பிக்சர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக ஏஎம்டி ப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) சப்போர்ட் கிடைக்கிறது.

அமேசான் ஃபயர் டிவி ஓம்னி மினி-எல்இடி சீரிஸ் அம்சங்கள் (Amazon Fire TV Omni Mini-LED Series Specifications): இந்த சீரிஸ் டிவிகளில் 55 இன்ச் கியூஎல்இடி, 65 இன்ச் கியூஎல்இடி, 75 இன்ச் கியூஎல்இடி மற்றும் 85 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே கொண்ட மாடல்கள் இருக்கின்றன. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அமேசான் மிரளுது.. நச்சுனு 85 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 4K வீடியோ!

மேலும், கேமிங் பிரியர்களுக்கு லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்க 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஸ்மார்ட் டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், பிரீமியம் டிவிகளில் வரும் டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது. இது ஐகியூ அவுட் கொடுக்கும். மேலும், கேமிங்குக்காக எச்எல்ஜி (HLG) உள்ளது. வழக்கமான எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1,344 டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கிடைக்கிறது.

இதுபோக அமேசான் ஃபயர் டிவிகளில் மட்டுமே கிடைக்கும் ஃபயர் டிவி ஆம்பியன் எக்ஸ்பீரியன்ஸ் (Fire TV Ambient Experience) மற்றும் ஃபயர் டிவி இன்டெலிஜென்ட் பிக்சர் (Fire TV Intelligent Picture) உள்ளது. மேலும், ஃபிலிம் மேக்கர் மோட் (FILMMAKER Mode) கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோவை பார்க்கையில், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. வழக்கமான பாக்ஸ் ஸ்பீக்கர்களும் கூடவே சப்வூப்பர் அவுட்புட் கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களுக்கான பிக்சர் மற்றும் ஃபர்பாமென்ஸ் கொடுக்கும் ஏடிஎம் ஃப்ரீசிங்க் பிரீமியம் ப்ரோ சப்போர்ட் வருகிறது. ஆகவே, பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக மாடலாக இந்த அமேசான் ஃபயர் டிவி ஓம்னி மினி-எல்இடி சீரிஸ் இருக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistants) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது.

அமேசான் டிவிகளில் கிடைக்கும் ஃபயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) பேக் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) வருகிறது. இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட்களில் 2 எச்டிஎம்ஐ (HDMI), 1 யுஎஸ்பி (USB), ஈதர்நெட் (Ethernet), ஹெட்போன் ஜாக் (Headphone Jack) ஆகியவை வருகின்றன.

அமேசான் ஃபயர் டிவி ஓம்னி மினி-எல்இடி சீரிஸ் 55 இன்ச் மாடலின் விலை ரூ.69,225ஆகவும், 65 இன்ச் மாடலின் விலை ரூ.92,020ஆகவும், 75 இன்ச் மாடலின் விலை ரூ.1,26,635ஆகவும் இருக்கிறது. அதேபோல 85 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடலின் விலை ரூ. 1,77,290ஆக இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம். குளோபல் மார்கெட்டில் வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Fire TV Omni Mini-LED Series With 55 inch to 85 inch Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X