Home
Gadgets

வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. 55 இன்ச் LED டிவி.. ரூ.28999-க்கு வருது.. புது அமேசான் சேல்.. எந்தெந்த டிவிகள்?

இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது போல என்று சொல்லும்படி அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனை (Amazon Electronics Premier League Sale) தொடங்கி இருக்கிறது. 65 சதவீதத்துக்கும் அதிகமான டிஸ்கவுண்ட்டில் இப்போது டிவிகள் கிடைக்கின்றன. இதில் ரூ.30,000 பட்ஜெட்டில் அதிக டிஸ்கவுண்ட்டில் கிடைக்கும் டிவிகளை பார்க்க போகிறோம். இதில் 43 இன்ச் முதல் 55 இன்ச் வரையில் மாடல்கள் இருக்கின்றன. சாம்சங், ஏசர், டிசிஎல் மற்றும் ரெட்மி போன்ற பிராண்ட்களும் இடம் பெற்றுள்ளன.

43 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4K விவிட் ப்ரோ டிவி அம்சங்கள், விலை (43 inch Samsung Crystal 4K Vivid Pro Specifications Price): இதுவொரு டி சீரிஸ் (D Series) மாடலாகும். 4K ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. 50Hz ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), எச்டிஆர் (HDR), 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling) கிடைக்கிறது.

மேலும், கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. 20W ஆடியோ அவுட் கிடைக்கிறது. கியூ சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் உள்ளது. பிக்ஸ்பை (Bixby) அசிஸ்டன்ட், ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub) போன்ற சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக பீச்சர்கள் இருக்கின்றன.

எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யுஎஸ்பி போர்ட் (USB Port), ஈதர்நெட் (Ethernet), எல்ஏஎன் (LAN), வை-பை (Wi-Fi), ப்ளூடூத் போன்ற கனெக்விட்டி சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 43 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4K விவிட் ப்ரோ டிவியின் விலை ரூ.31,490ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. ரூ.27,490 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 2 டிவி ஆர்டர்.. 55 இன்ச் LED டிவி.. ரூ.28999-க்கு வருது!

55 இன்ச் ஏசர்ப்யூர் எல்இடி டிவி அம்சங்கள், விலை (55 inch Acerpure LED TV Specifications Price): இதுவொரு ஸ்விப்ட் சீரிஸ் (Swift Series) மாடலாகும். இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) பீச்சர்கள் கிடைக்கின்றன.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் எச்டி (DTS HD) சப்போர்ட் கொண்ட 24W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. இந்த 55 இன்ச் ஏசர்ப்யூர் எல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, ப்ளூடூத், வை-பை ஈதர்நெட் கிடைக்கின்றன.

இந்த 55 இன்ச் ஏசர்ப்யூர் எல்இடி டிவியின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.5,000 டிஸ்கவுண்ட் போக ரூ.28,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

55 இன்ச் டிசிஎல் எல்இடி டிவி அம்சங்கள், விலை (55 inch TCL LED TV Specifications Price): இந்த டிவி பி655 சீரிஸ் (P655 Series) மாடலாகும். 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K ரெசொலூஷன் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement) மற்றும் எச்டிஆர்10 (HDR 10) கிடைக்கிறது.

மேலும், மைக்ரோ டிம்மிங் (Micro Dimming), ஏஐபிகியூ (AiPQ) ப்ராசஸர் கிடைக்கிறது. டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட 24W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. இந்த 55 இன்ச் டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வருகிறது. எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), ப்ளூடூத், வை-பை, ஈதர்நெட் மற்றும் ஆப்டிகல் போன்ற வழக்கமாக கனெக்டிவிட்டிகள் உள்ளன.

கூகுள் அசிஸ்டன்ட், மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 55 இன்ச் டிசிஎல் எல்இடி டிவியின் விலை ரூ.29,990ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.2,250 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.27,470 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்குவோருக்கு கிடைக்கும. இல்லையென்றால், ரூ.1,500 டிஸ்கவுண்ட் மட்டுமே கிடைக்கும்.

43 இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எல்இடி டிவி அம்சங்கள், விலை (43 inch Redmi F Series LED TV Specifications Price): இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின், மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metal bezel-less) டிசைன் மற்றும் 4K ரெசொலூஷன் கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிவி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எம்இஎம்சி சப்போர்ட் கிடைக்கிறது.

Take a Poll

இந்த டிவி ஆடியோவில் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், டால்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல் டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) மற்றும் டிடிஎஸ் எச்டி சப்போர்ட் கொண்ட 24W ஆடியோ அவுட் கிடைக்கிறது. இந்த டிவியில் அலெக்சா அசிஸ்டன்ட், கூகுள் பிளே ஸ்டோர் போன்ற பீச்சர்களுடன் பயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) கிடைக்கிறது. இந்த ரெட்மி டிவியில் 2 ஜிபி ரேம் உள்ளது.

8 ஜிபி மெமரி கிடைக்கிறது. டூயல் பேண்ட் வை-பை, 3 எச்டிஎம்ஐ, 2 யுஎஸ்பி, ப்ளூடூத் 5.0, ஆப்டிகல் போன்ற கனெக்டிவிட்டி உள்ளது. இந்த 43 இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எல்இடி டிவின் விலை ரூ.25,999ஆ இருக்கிறது. இப்போது, அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.24,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை மற்றும் டிஸ்கவுண்ட் அடிக்கடி மாறக்கூடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Electronics Premier League Sale Deals on Smart TV Under Rs 30000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X