Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்கனும்.. ரூ.10,999 பட்ஜெட்ல ஹோம் கேமரா மானிட்டர்.. லைட், ஏசி, பேன் கன்ட்ரோல்.. அலெக்சா வாய்ஸ்!

வீட்டுக்கு வீடு தேவைப்படும்படி ஹோம் கேமரா மானிட்டர், லைட் கன்ட்ரோல், ஏசி கன்ட்ரோல், ஃபேன் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், ஸ்மார்ட் டோர் பெல் கேமரா போன்ற பீச்சர்களுடன் அமேசான் எக்கோ ஷோ 5 (Amazon Echo Show 5) மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அலெக்சா வாய்ஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் டிஸ்பிளே மற்றும் 2 ஸ்பீக்கர்களுடன் வாங்க கிடைக்கிறது. இந்த அமேசான் எக்கோ ஷோ 5 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் எக்கோ மாடல்களை பற்றி சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் கன்ட்ரோல்களுடன் மார்கெட்டில் தனியிடம் பிடித்தது. இப்போது, 5.5 இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய அமேசான் எக்கோ ஷோ 5 மாடல் வெளியாகி இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப பீச்சர்கள் வருகின்றன.

வீட்டுக்கு 1 வாங்கனும்.. ரூ.10,999 பட்ஜெட்ல ஹோம் கேமரா மானிட்டர்!

அதாவது, இந்த டிஸ்பிளே மூலம் வீடியோ கால்களை செய்து கொள்ள முடியும். அதேபோல இதில் இருக்கும் கேமரா மூலம் ஹோம் மானிட்டர் செய்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட இன்டோர் சிசிடிவி கேமராவை போலவே இருக்கிறது. மியூசிக் மற்றும் வாய்ஸ் சாட்டிங் செய்வதற்காக 2 ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. லைட், ஏசி, பேன் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், கூடுதல் பீச்சர்களும் உள்ளது.

அதாவது, இந்த அமேசான் எக்கோ ஷோ 5 மாடலுடன் கியூபோ ஸ்மார்ட் டோர்பெல் கேமராவை (Qubo Smart Doorbell Camera) வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே டோர் பெல்லை அடிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். டிஸ்பிளே மூலம் அதை பார்த்து கொள்ளலாம். இப்படி பல்வேறு அப்கிரேட்களை இந்த எக்கோ மாடல் கொடுக்கிறது.

வீட்டுக்கு 1 வாங்கனும்.. ரூ.10,999 பட்ஜெட்ல ஹோம் கேமரா மானிட்டர்!

அமேசான் எக்கோ ஷோ 5 அம்சங்கள் (Amazon Echo Show 5 Specifications): இந்த எக்கோ மாடலில் 5.5 இன்ச் (960 x 480 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டில்பிளேவில் டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. டெய்லி ரீமைண்டர்கள், காலண்டர், கிளாக் போன்றவற்றை அதில் வைத்து கொள்ளலாம். அதேபோல 2 எம்பி பில்ட்-இன் கேமராவை கொடுத்து இருக்கிறது.

இந்த கேமரா மூலம் வீடியோ கால்களை செய்து கொள்ள முடியும். அதேபோல அதை வைத்து ஹோம் மானிட்டரிங் செய்து கொள்ளலாம். அதாவது, எக்கோ ஷோ (Echo Show) ஆப் மூலம் வீடியோ கால்களை செய்வது போலவே, அதே ஆப் மூலம் நீங்கள் வீட்டில் இல்லாதபோதும், மானிட்டரிங் செய்து கொள்ள முடியும். வீட்டில் பெட் வளப்பவர்களுக்கு இது பக்காவாக இருக்கும்.

மேலும், அலெக்சா ஆப் (Alexa app) மூலம் மியூசிக் மற்றும் ஷோக்களை ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம். இதில் 5.5 இன்ச் டிஸ்பிளே வருவதால், டோர் பெல் கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், அந்த டோர் பெல் கேமராவுக்கு கூடுதல் தொகை செலுத்தி வாங்க வேண்டி இருக்கும். அப்படி வாங்கிவிட்டால், அதை கதவுக்கு அருகில் பொருந்து பயன்படுத்தலாம்.

இந்த பெல் கேமரா மூலம் யாராவது காலிங் செய்தால், உங்களது அமேசான் எக்கோ ஷோ 5 மாடலில் டிஸ்பிளேவில் அவர்களது வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இது வீட்டில் தனியாக இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும். 1.7 இன்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் 2X பேஸ் சப்போர்ட் உள்ளது. மேலும், வழக்கமாக கிடைக்கும் லைட், ஃபேன், டிவி, கேமரா, ஏசி போன்ற கன்ட்ரோல்கள் கிடைக்கிறது.

சார்கோல் (Charcoal) மற்றும் கிளவுட் ப்ளூ (Cloud Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த அமேசான் எக்கோ ஷோ 5 மாடலின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. இது வெறும் டிவைஸ் விலையாகும். டோர் பெல், ஸ்மார்ட் லைட் போன்ற டிவைஸ்கள் வேண்டுமானால், கூடுதலாக தொகை செலுத்தி வாங்கி கொள்ள வேண்டும். வீட்டிற்கு ஏற்ற டிவைஸாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Echo Show 5 With 2MP Camera Launched India Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X