ஸ்மார்ட் டிவி, 5G போன்களுக்கு நம்பமுடியாத சலுகையை வழங்கி அதிரடி காட்டிய அமேசான்.!

|

அமேசான் தளத்தில் நடைபெறும் Amazon Great Indian Festival Finale Days எனும் சிறப்பு விற்பனை ஆனது நாளை முடிவடைகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் தரமான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி, சாம்சங்

குறிப்பாக சியோமி, சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அட்டகாசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இப்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்,ஸ்மார்ட் டிவிகளைப் பார்ப்போம்.

ரெட்மி 43-இன்ச் Android 11 Series  ஸ்மார்ட் டிவி ( L43M6-RA/L43M7-RA)

ரெட்மி 43-இன்ச் Android 11 Series ஸ்மார்ட் டிவி ( L43M6-RA/L43M7-RA)

அமேசான் தளத்தில் ரெட்மி 43-இன்ச் Android 11 Series ஸ்மார்ட் டிவி ( L43M6-RA/L43M7-RA)மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ19,999-க்கு வாங்க முடியும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் எனப்பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போதுசாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,499-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த சாம்சங் போன் எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் பிராசஸர்,50எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு, 8எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

WhatsApp சைலண்டா அறிமுகம் செய்த அம்சம்.. இனி கூகுள் மீட், ஜூம் மீட் எல்லாம் தேவையில்ல போல!WhatsApp சைலண்டா அறிமுகம் செய்த அம்சம்.. இனி கூகுள் மீட், ஜூம் மீட் எல்லாம் தேவையில்ல போல!

Toshiba 43-இன்ச் V Series ஸ்மார்ட் டிவி (43V35KP)

Toshiba 43-இன்ச் V Series ஸ்மார்ட் டிவி (43V35KP)

முன்பு ரூ.34,990-க்கு விற்பனை செய்யப்பட்ட Toshiba 43-இன்ச் V Series ஸ்மார்ட் டிவி (43V35KP) மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.19,990-க்கு வாங்க முடியும். அதாவது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்ப்பீக்கர்கள், குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

முன்பு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது அமேசான் தளத்தில் ரூ.19,999-க்கு வாங்க முடியும். மேலும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.67-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

ஏசர் 40-இன்ச் P Series ஸ்மார்ட் டிவி

ஏசர் 40-இன்ச் P Series ஸ்மார்ட் டிவி

முன்பு ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்பட்ட ஏசர் 40-இன்ச் P Series ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.16,999-க்கு வாங்க முடியும். அதாவது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 24 வாட் ஸ்பீக்கர்கள், 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஏசர் ஸ்மார்ட் டிவி.

ரெட்மி 11 பிரைம் 5ஜி

ரெட்மி 11 பிரைம் 5ஜி

அமேசான் தளத்தில் ரெட்மி 11 பிரைம் 5ஜி போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை ரூ.12,999- விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க
முடியும்.

அதேபோல் MediaTek Dimensity 700 சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

iFFALCON 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (43U61)

iFFALCON 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (43U61)

அமேசான் தளத்தில் iFFALCON 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (43U61)) மாடலுக்கு 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக
இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.17,990-விலையில் வாங்க முடியும். மேலும் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம்,கூகுள் அசிஸ்டண்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
Amazon Diwali Sale: 61 percent off on 5G phones, smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X