இனி 100 இன்ச் ஸ்மார்ட் டிவி எதுக்கு? ரூ.7299 பட்ஜெட்ல 120 இன்ச்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
இந்தியாவில் 75-இன்ச், 85-இன்ச், 100-இன்ச் டிவிகளை விட பெரிய திரை அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் இப்போது வரும் அதிநவீன ப்ரொஜெக்டர் மாடல்கள் சினிமா தியேட்டர் அனுபவத்தை வழங்குகின்றன. இந்நிலையில் பெரிய திரை அனுபவத்தை தரும் ஜெப்ரானிக்ஸ் (ZEBRONICS) நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 (ZEBRONICS PIXAPLAY 53) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை ரூ.7,299 விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 53 Specifications): 120 இன்ச் புரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல். ஆகவே 100 இன்ச், 75 இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
3000 லூமென்ஸ் மற்றும் 1080P நேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 4K சப்போர்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆட்டோ கீஸ்டோன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 53 மாடல் வெளிவந்துள்ளது.
ஸ்கிரீன் மிரரிங் ஆதரவு இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் இயங்கும். அதுவும் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடலின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.

அதேபோல் பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் வெளியானது.
ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் உடன் ரிமோட் ஒன்று கிடைக்கிறது. பெரிய திரை மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஜெப்ரானிக்ஸ் விரைவில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








