அடேங்கப்பா.. இந்த 32-இன்ச் MI ஸ்மார்ட் டிவி இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? அசத்தும் Amazon ஆஃபர்..
அமேசான் டீல் ஆஃப் தி டே (Amazon Deal of the day) எனும் சிறப்பு சலுகை மூலம் இன்று பிரபலமான எம்ஐ ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் (Horizon Edition) எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ மாடலுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ மாடல் ஆனது முன்பு ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் (Amazon) தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவிக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.

இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த 32-இன்ச் எம்ஐ ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ மாடல் 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 95% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஆழமான கான்ட்ராஸ்ட்டுகள் மற்றும் கலர் ரீப்ரொடெக்ஷனில் பின்பாயிண்ட் துல்லியம் போன்ற வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளத்தை (ஓஎஸ்) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன்-ஐ கொண்ட வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ மாடல். பின்பு இந்த டிவியில் பேட்ச்வால்(PatchWall) வசதி உள்ளது. எனவே பல ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும். என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், 3.5 மிமீ ஹெட்ஜாக், ப்ளூடூத் 4.2 மற்றும் வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ், சோனிலிவ், யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த 32-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த எம்ஐ ஸ்மார்ட் டிவியில் Vivid பிக்சர் என்ஜின் ஆதரவு கூட உள்ளது. எனவே கம்மி விலையில் இந்த டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








