அமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.!

|

அமேசான் நிறுவனம் ஒனிடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய Fire TV பதிப்பு கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 20-ம் தேதி முதல்

டிசம்பர் 20-ம் தேதி முதல்

குறிப்பாக அமேசான் மற்றும் ஒனிடா நிறுவனம் சேர்ந்து அறிமுகம் செய்துள்ளது இந்த 32-இன்ச்(HD) மற்றும் 43-இன்ச் (Full HD) ஸமார்ட் டிவி மாடல்கள் வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஒனிடாவின் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது Fire TV பதிப்பு அனுபவத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதாவது வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளிலிருந்து தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தேடலாம் மற்றும் பார்க்கலாம்.

அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?

ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ்

ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ், யூடியூப், சோனி லிவ், ஜீ5, சன் Nxt உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த ஒனிடாவின் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும்.

 டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட்

டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட்

குறிப்பாக ஒனிடா நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவிகள் ஆனது மோட்டோரோலா, டிசிஎஸ்,நோக்கியா, சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒனிடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த 32-இன்ச் மற்றும் 43-இன்ச ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி டிஸ்பிளேஅம்சத்துடன் 1200: 1 என்ற மாறுபட்ட விகிதத்துடன் மற்றும் 300nitsபிரைட்நஸ் வசதியும் ஆதரிக்கிறது.அதிவேக ஒலி அனுபவத்திற்காக டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட் ஒலியையும் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது.

மிகவும் அருமையாக இருக்கும்.

ஒனிடா Fire TV பதிப்பு அலெக்சா குரல் ரிமோட்டுடன் வருகிறது, இதன் மூலம் அமேசான் அலெக்சாவிடம் பல்வேறுபணிகளையும் உள்ளடக்கத்தையும் செய்யுமாறு கேட்கலாம். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

அமேசான் மற்றும் ஒனிடா நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவிகள் குவாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகின்றன, பின்பு வைஃபை, 3 எச்.டி.எம்.ஐ போர்ட்கள், 1 யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 1 இயர்போன் போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டாகசமான விலை

அட்டாகசமான விலை

ஒனிடா 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
ஒனிடா 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon and Onida Joins to Launch Smart TVs in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X