Amazon Alexa Event 2019: அமேசான் ரசிகர்களை மிரளவிட்ட புதிய அறிமுகங்கள்! என்னவென்று தெரியுமா?
அமேசான் நிறுவனம் இன்று தனது Amazon Alexa Event 2019 நிகழ்ச்சியை நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனத்தின் பல புதிய சாதனங்கள் மற்றும் அமேசான் மேம்படுத்தியுள்ள புதிய சேவைகள் மற்றும் புதிய சாதனங்களின் விலை விபரங்களை என அனைத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட் சாதனங்கள்
அமேசான் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் எக்கோ ஸ்டூடியோ (Echo Studio), எக்கோ தர்டு-ஜென் (Echo third-gen), எக்கோ டாட் (Echo Dot), எக்கோ பட்ஸ் (Echo Buds), எக்கோ பிளெக்ஸ் (Echo Flex), எக்கோ கிலோ (Echo Glow), எக்கோ பிரேம்ஸ் (Echo Frames), எக்கோ ஷோ 8 (Echo Show 8) மற்றும் எக்கோ லூப் (Echo Loop) போன்ற ஸ்மார்ட் சாதனங்களை அமேசான் அறிமுகம் செய்துள்ளது.

எக்கோ ஸ்டூடியோ (Echo Studio)
டால்பி அட்மோஸ் 3D ஆடியோ சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அமேசானின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் தான் இந்த எக்கோ ஸ்டூடியோ. பிரீமியம் குவாலிட்டி டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் ஹோம் மேக்ஸ் மாற்று ஆப்பிள் ஹோம் சாதனங்களைப் போன்ற சேவையை இந்த ஸ்பீக்கர் வழங்கும்.
விலை: ரூ. 22,999 (இந்திய மதிப்பு)

எக்கோ டாட் (Echo Dot)
புதிய எக்கோ டாட் சாதனத்தில் இப்போது எல்.ஈ.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடிகாரம், டைமர்கள், அலாரங்கள் மற்றும் வெப்பநிலை விபரங்களைப் பயனர்கள் அறியலாம்.
விலை: ரூ .5,499

எக்கோ பட்ஸ் (Echo Buds)
அமேசான் நிறுவனம் முதல் முறையாக வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. போஸ் (Bose) நிறுவனத்துடன் கூட்டணி கொண்டு அமேசான் இந்த புதிய எக்கோ பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. தடையில்லாத 5 மணி நேர பிளேபேக் டைம் மற்றும் கூடுதலாக 20 மணி நேர பயணப்பட்டு சேவை பேட்டரி கேஸுடன் வழங்கப்படுகிறது என்று அமேசான் தெரிவித்துள்ளது.
விலை: $129

எக்கோ பிளெக்ஸ் (Echo Flex)
அமேசான் எக்கோ ஃப்ளெக்ஸ் என்பது சிறிய வகை எக்கோ ஸ்பீக்கர் ஆகும். வீட்டில் உள்ள ஃபிளக்கில் சொருகிப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொபைல் சார்ஜிங் செய்வதற்கான போர்டுடன் கூடிய மோஷன் சென்சார்களுடன் இந்த எக்கோ பிளெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை: $14.99

எக்கோ க்லோ (Echo Glow)
அமேசான் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்ட சாதனம் தான் இந்த எக்கோ க்லோ. டச் ரெஸ்பான்ஸ் உடன் வந்துள்ள இந்த சாதனம், பயனர் தொடும் ஒவ்வொரு முறையும் வண்ணங்களை மாற்றி அமைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
விலை: $29.99

எக்கோ பிரேம்ஸ் (Echo Frames)
எக்கோ பிரேம்ஸ் கண்ணாடிகளில் கேமராக்கள் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த எக்கோ பிரேம்ஸ் கண்ணாடிகள் அலெக்ஸா ஆதரவுடன் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பே இதில் வழங்கப்பட்டுள்ள direction speakers தான். இதனால் மற்றவர்கள் யாரும் உங்கள் கண்ணாடி பேசுவதைக் கேட்க முடியாது.
விலை:$179.99

எக்கோ ஷோ 8 (Echo Show 8)
முன்பு வெளியிடப்பட்ட எக்கோ ஷோ சாதனைகளுக்கு இடையிலான அளவில் இந்த புதிய எக்கோ ஷோ 8 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள கேமராவிற்கு என்று தனி பிரத்தியேக பிரைவசி மூடும் ஷட்டரை அமேசான் வழங்கியுள்ளது.
விலை: $129.99

எக்கோ லூப் (Echo Loop)
அலெக்சா சேவையுடன் கூடிய சிறிய ஸ்மார்ட் மோதிரத்தை எக்கோ லூப் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எந்த ஒரு எக்கோ சாதனத்திலும் இல்லாத அளவிலான மிகச்சிறிய ஸ்பீக்கர் இந்த எக்கோ லூப் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது.
விலை: $129


Click it and Unblock the Notifications