பின்றானே இவன்.. மிரளவிட்ட ஓப்பன்-இயர் பட்ஸ்.. டச் கன்ட்ரோல்.. நாய்ஸ் ரெடக்சன்.. 440mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓப்பன்-இயர் பட்ஸ் டிசைன் மட்டுமல்லாமல், ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட், IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட், 440mAh பேட்டரி, டச் கன்ட்ரோல், ஏஐ நாய்ஸ் ரெடக்சன், மல்டி-டிவைஸ் பேரிங் மற்றும் வாட்ச் கனெக்டிவிட்டி பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி இருக்கிறது. கம்போர்ட் கிளிப் ஆன் கிரிப் கிடைப்பதால், ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பக்காவான மாடலாக இருக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் அப் ஓப்பன் இயர்பட்ஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, வரும் இயர்பட்ஸ் மாடல்கள் பெரும்பாலும் இன்-இயர் டிசைனில் மட்டுமே வருகின்றன. காம்பாக்ட் டிசைனில் இருந்தாலும், சில நேரங்களில் கிரிப் கிடைக்காமலும் இருப்பதை மறுக்க முடியாது. அதிலும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு சொல்லவே வேண்டியது கிடையாது. கிரிப் இல்லையென்றால், சிரமம் தான். இவர்களுக்கு இந்த அமேஸ்ஃபிட் அப் மாடல் பக்காவாக இருக்கும்.

ஓப்பன் இயர் டிசைன் மட்டுமல்லாமல், காதுகளில் கிளிப் அப் கிடைக்கிறது. ரன்னிங் அல்லது சைக்கிளிங் போன்ற நேரங்களிலும் கூடுதல் கிரிப் இல்லாமலேயே இதை பொருத்தி கொள்ளலாம். இதுபோக பிசிகல் பட்டன் வருவதால், ரஷ்ஷான நேரங்களிலும் ஈஸி ஹேண்டில் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல், IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
அமேஸ்ஃபிட் அப் அம்சங்கள் (Amazfit Up Specifications): இந்த ஓப்பன் இயர்பட்ஸ் பாலிமர் மெட்டீரியலில் டைட்டானியம் நிக்கல் அலாய் (Titanium-nickel Alloy) கொண்டிருக்கிறது. டைனாமிக் வொர்க்-அவுட்களுக்கு ஏற்ப சிங்கிள் அட்ஜெட்ஸ்மெண்ட் கொண்ட கிளிப்-ஆன் டிசைனில் (Clip-on Design) வருகிறது. பவர் பட்டன் (Power Button) மட்டுமல்லாமல் டச் கன்ட்ரோல் கிடைக்கிறது.
கால் கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். இந்த அமேஸ்ஃபிட் அப் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) உள்ளது. ஆகவே, ப்ளூடூத் வி5.3 (Bluetooth: v5.3) கனெக்டிவிட்டி மற்றும் ஏஏசி (AAC), எஸ்பிசி கோடாக் (SBC Codec) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) சப்போர்ட் உள்ளது.
பிரீமியம் பீச்சராக ஜெப் ஃப்ளோவ் (Zepp Flow) அசிஸ்டன்ட் வருகிறது. இதுவொரு ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) மாடலாகும். ஒரே நேரத்தி மொபைல், லேப்டாப் போன்ற டிவைஸ்களில் பயன்படுத்த ஏதுவாக மல்டி டிவைஸ் பேரிங் (Multi-device Pairing) கிடைக்கிறது. குயிக் பேரிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்புகிறது.
இயர்பட்களில் தாலா 50mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 440mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி-சி (USB-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. ஃபுல் சார்ஜ் செய்ய 6 மணி நேரங்கள் தேவைப்படும். ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 18 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த அமேஸ்ஃபிட் அப் ஓப்பன் இயர்பட்ஸ் மாடலில் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் கனெக்விட்டி உள்ளது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்டிருப்பதால், ரூ.4,200ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அமேஸ்ஃபிட் தளத்தில் முதலில் விற்பனைக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம். பிளாக் (Black) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








