Home
Gadgets

வேற மாதிரிங்க அவரு.. 328 அடி வாட்டர்-ப்ரூப்.. 40 நாட்கள் பேட்டரி.. கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே.. 26 ஜிபி மெமரி!

இந்திய ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்கள் எதிர்பார்க்கும்படியான ஒட்டுமொத்த பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 3 (Amazfit T-Rex 3) களமிறங்கியது. இதில் லாவா கலர் வேரியண்ட் எப்போது வெளியாகும் என்று அமேஸ்ஃபிட் பிரியர்கள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில், சத்தமே இல்லாமல் மார்கெட்டில் அது வெளியாகிவிட்டது. பீச்சர்களை பார்த்தால், உண்மையிலேயே இது வேற மாதிரியான மாடல்தான் போல என்று உங்களுக்கு தோன்றும். இந்த அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 3 லாவா கலர் வேரியண்ட்டின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 3 அம்சங்கள் (Amazfit T-Rex 3 Specifications): இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 1.5 இன்ச் (480 × 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, அவுட்டோர் டிஸ்பிளே அவுட்புட் பக்காவாக எதிர்பார்க்கலாம். மேலும், 322 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

வேற மாதிரிங்க அவரு! 328 அடி வாட்டர்-ப்ரூப்.. 40 நாட்கள் பேட்டரி மாடல்!

இதுவொரு ரக்கட் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) டிஸ்பிளே பாதுகாப்பு கொண்டிருக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810ஜி மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொடுக்கிறது. பாலிமர் மிடில் ஃபிரேம் (Polymer Middle Frame) மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் (Stainless Steel Bezel) கிடைக்கிறது. லிக்விட் சிலிகான் (Liquid Silicone) ஸ்ட்ராப் உள்ளது.

மேக்னட்டிக் சார்ஜிங் பேஸ் (Magnetic Charging Base) சப்போர்ட் கொண்ட 700mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் நார்மல் மோடில் 27 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். பேட்டரி சேவர் மோடில் 40 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், ஹெவி யூசேஜ் மோடில் 13 நாட்களுக்கும், ஜிபிஎஸ் மோடில் 42 மணி நேரங்களுக்கும் பேக்கப் பெற்று கொள்ளலாம்.

இந்த அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 3 மாடலில் பிளட்-ஆக்ஸிஜன் லெவல் டிராக்கிங் சப்போர்ட் கொடுக்க பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (PPG Biometric Sensor) கிடைக்கிறது. இதுபோக ஆக்சிலரேஷன், கைரோஸ்கோப், ஜியோமேக்னட்டிக், பரோமெட்ரிக், ஆம்பியன் லைட் மற்றும் டெம்ப்ரேச்சர் போன்ற பல்வேறு சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டரிங் உள்ளது.

இந்த சென்சார்கள் மூலம் ஹார்ட் ரேட் மானிட்டரிங், பிளட்-ஆக்ஸிஜன் மானிட்டரிங், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் செய்து கொள்ளலாம். அதேபோல ஸ்லீப் மானிட்டரிங், ப்ரீதிங் குவாலிட்டி, ஸ்லீப் ஸ்கோர் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இதுபோக பிரீத் டிரெய்னிங், ப்ரீத் ஹோல்டிங் டெஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்காக ஜெப் ஆப் (Zepp App) சப்போர்ட் கிடைக்கிறது.

ஹெல்த் மானிட்டர்களுக்கு அடுத்து 177 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மூலம் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் கிடைக்கின்றன. டிராக் ரன் மோட் (Track Run Mode), விர்ச்சுவல் பேசர் (Virtual Pacer) போன்றவை இருக்கிறது. மேலும், ரன்னிங் பவர் மீட்டர், சைக்கிளிங் பவர் மீட்டர், சைக்கிளிங் ஸ்பீடோமீட்டர் போன்றவை கிடைக்கின்றன. கூகுள் பிட் (Google Fit), ஆப்பிள் ஹெல்ட் (Apple Healt) சப்போர்ட் உள்ளது.

டூயல் பேண்ட் ஜிபிஎஸ், வை-பை மற்றும் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 26 ஜிபி மெமரி சப்போர்ட் உள்ளது. ஓனிக்ஸி (Onxy) மற்றும் லாவா (Lava) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இவ்வளவு பீரிமியம் பீச்சர்களுடன் கிடைப்பதால், இதன் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் அமேஸ்ஃபிட் தளங்களில் விரைவில் விற்பனை தொடங்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit T-Rex 3 With Lava Color Launched Sale From Amazon Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X