ரூ.12,999 விலையில் Amazfit GTS 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: அட்டகாச அம்சங்கள்!
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் டிசம்பர் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2, 1.65 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும்.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 இந்தியாவில் டிசம்பர் 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சானது டிசம்பர் 21 முதல் அமேசான்.காம் மற்றும் அமேஸ்ஃபிட் இணையதளத்தில் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

1.65 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
அமேஸ்ஃபிட் இந்த மாத இறுதியில் ஜிடிஎஸ் 2 மினியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் 341 பிக்சல் எச்டி ரெசல்யூஷனுடன் வருகிறது. இது ஆப்டிக்கல் டயமண்ட் போன்ற கார்பன் கோட்டிங் உடன் வருகிறது.

வாட்டர் ரெசிஸ்டென்ஸ் உள்ளிட்ட அம்சம்
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்சானது வாட்டர் ரெசிஸ்டென்ஸ், நீச்சல் அம்சம் போன்றவற்றுடன் வருகிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 5.0, ஐஓஎஸ் 10.0 மேற்பட்ட வெர்ஷன்களை ஆதரிக்கும்.

24/7 இதயத்துடிப்பு கண்காணிப்பு
ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் பயோடிராகர் 2 பிபிஜி ஆப்டிகல் சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 24/7 இதயத்துடிப்பு கண்காணிப்புடன் வருகிறது. அதுமட்டுமின்றி அசாதாரண இதய துடிப்புகளை கவனிக்கும் போது ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை செய்கிறது.

3ஜிபி உள்சேமிப்பு வசதி
அதுமட்டுமின்றி அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்சானது 90-க்கும் மேற்பட்ட உள்ளமைக்கப்பட்ட விளையாட்டுகளுடன் வருகிறது. அதோடு 3ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. அதோடு தொலைபேசி இணைப்புக்கு அழைப்புகளுக்கான உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது.

246 எம்ஏஎச் பேட்டரி
அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சானது ப்ளூடூத் இணைப்புடன் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது. இதில் கைரோஸ்கோப், ஆக்ஸிலரோமீட்டர், ஏர் பிரஷர் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சானது 246 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 7 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.
File Images


Click it and Unblock the Notifications