அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
அமேஸ்ஃபிட் இந்தியாவில் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி என்ற ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் தான் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனையை துவங்கியது. இப்பொழுது இதன் மினி வெர்ஷனையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

புதிய அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2 மினி
புதிய அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2 மினி ஸ்மார்ட் வாட்ச் அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இணையதளம் வழியாக டிசம்பர் 26ம் தேதி முதல் வெறும் ரூ .6,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட் வாட்சை பயனர்கள் வாங்க முடியும். அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2 மினி மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க் மற்றும் சேஜ் கிரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 சமீபத்தில் ரூ .12,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி சிறப்பம்சங்கள்
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி 1.55' இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே 354 x 306 பிக்சல்கள் மற்றும் 301 பிபி பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5 டி கிளாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் 50+ வாட்ச் பேஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. இது Android மற்றும் iOS சாதனங்களுக்கான இணக்க ஆதரவையும் கொண்டுள்ளது. ஸ்லீப் மோடு மற்றும் ஆக்ட்டிவிட்டி ட்ராக்கிங் போன்ற அம்சங்களுடன் 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் பெற்றுள்ளது.

70-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடு
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி 70-க்கும் மேற்பட்ட உள்ளமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை ஸ்மார்ட்வாட்ச் ஆதரிக்கிறது. ஸ்மார்ட்வாட்சில் பயோ டிராக்கர், 2 பிபிஜி (இரத்த ஆக்ஸிஜனை ஆதரிக்கிறது) உயிரியல் தரவு சென்சார் கொண்டுள்ளது. இது ஆக்ஸிலெரோமீட்டர், கைரோஸ்கோப் சென்சார், ஜியோ மேக்னெட்டிக் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார் உள்ளிட்ட சென்சார்களைக் கொண்டுள்ளது.

GPS மற்றும் GLONASS
ஸ்மார்ட்வாட்ச் 220 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயங்குகிறது, இது வழக்கமான பயன்பாட்டுடன் 14 நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் பயன்முறையில் 21 நாட்கள் பேட்டரி ஆயுள் வரை நீடிக்கும். இணைப்பிற்காக, அமேஸ்ஃபிட் சாதனம் புளூடூத் 5.0 LE, NFC, GPS மற்றும் GLONASS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications