இனி போன் எதுக்கு? AMOLED டிஸ்பிளே.. 12 நாட்கள் பேட்டரி.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. 5ATM ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆக்டிவிட்டி டிராக்கர்கள் மற்றும் ஹெல்த் மானிட்டர்களுடன் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 நியூ (Amazfit GTR 4 New) மாடல் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 12 நாட்கள் பேட்டரி, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், 2.3 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களில் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 நியூ மாடலின் முழு பீச்சர்கள், விலை எப்படி விவரங்கள் இதோ.
அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 நியூ அம்சங்கள் (Amazfit GTR 4 New specifications): இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 1.45 இன்ச் (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 331 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் டெம்பெர்ட் கிளாஸ் (Tempered Glass) வருகிறது. ஆன்டி-பிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) வருகிறது.

மேலும், ஆன்டி-கிளார் பெசல் (Anti-glare Bezel) கொண்டிருக்கிறது. ஜெப் ஓஎஸ் 2.0 (Zepp OS 2.0) வருகிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 7.0 (Android 7.0) மற்றும் ஐஓஎஸ் 12.0 (iOS 12.0) அல்லது அதற்கு மேற்பட ஓஎஸ் கொண்ட டிவைஸ்களில் இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 நியூ மாடலை கனெக்ட் செய்து கொள்ளலாம். ஆப்லைன் மியூசிக் சப்போர்ட் உள்ளது.
ஆகவே, 2.3 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) மற்றும் ப்ளூடூத் வாய்ஸ் காலிங் (Bluetooth Voice Calling) சப்போர்ட் வருகிறது. இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 நியூ மாடலில் 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன.
ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்ற 8 ஆக்டிவிட்டிகளை ஸ்மார்ட் ரெககனைஷன் செய்து கொள்ளக் கூடியது. இதுபோக ஸ்ட்ரென்த் டிரெய்னிங் (Strength Training), கோல்ப் ஸ்விங் (Golf Swing) மற்றும் ரன்னிங்கின் போது, லேன்-அக்கியூரெட் டிராக் ரன் மோட் (Lane-accurate Track Run Mode) போன்ற பீச்சர்களையும் பேக் செய்து கொடுத்துள்ளது.
இந்த மாடலில் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் (5ATM Water Resistant) வருகிறது. பயோடிராக்கர் 4.0 (BioTracker 4.0) கொண்ட பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (PPG Biometric Sensor) வருகிறது. பிளட் ஆக்ஸிஜன் லெவல், ஹார்ட்ரேட் போன்ற மானிட்டர்கள் வருகிறது. மேலும், ஆக்சிலெரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor) உள்ளது.
இதுபோக, ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), பாரோமெட்ரிக் அல்டிமீட்டர் (Barometric Altimeter), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் டெம்பரேச்சர் சென்சார் (Temperature Sensor) வருகிறது. இந்த மாடலின் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.0 எல்இ (Bluetooth 5.0 LE), வை-பை (Wi-Fi) வருகிறது.
டூயல் பேண்ட் ஜிபிஎஸ் (Dual-band GPS) & சாட்டிலைட் பேசிஷனிங் சிஸ்டம் (Satellite Positioning Systems) வருகிறது. இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 நியூ மாடலில் 475mAh பேட்டரி வருகிறது. 12 நாட்கள் பேக்கப் பெறலாம். சிலிகான் லெதர் ஸ்ட்ராப் கொண்ட கேலக்ஸி பிளாக் (Galaxy Black) மற்றும் லெதர் கொண்ட பிரவுண் (Brown) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளதால், விலையும் அதிகமாகவே இருக்கிறது. ரூ.16,999ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா (Amazfit India) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்கள் வேண்டுமானால், இந்த மாடலுக்கு செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications