மிகவும் எதிர்பார்த்த அமேஸ்பிட் ஜிடிஆர் 2 முன்பதிவு துவக்கம்.! விலை மற்றும் விபரம்.!
ஹூவாமி நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. மேலும் இந்த முன்பதிவு வரும் டிசம்பர் 17 வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு கூடுதலாக மாற்றிக் கொள்ளக்கூடிய ஸ்டிராப வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மற்றும் அலுமினியம் அலாய் கேஸ் மற்றும் சிலிகான் ஸ்டிராப் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
குறிப்பாக இதன் சிலிகான் ஸ்டிராப் வெர்ஷன் விலை ரூ.12,999 என்றும் கிளாசிக் எடிஷன் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் கேஸ் லெதர் ஸ்டிராப் கொண்ட வெர்ஷன் விலை ரூ.13,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அமேஸ்பிட் ஜிடிஆர் 2 சாதனம் ஆனது 1.39-இன்ச்AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 454x454 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இந்த சாதனத்தில் 12 ஸ்போர்ட் மோட்கள், ஆக்டிவிட்டி டிராக்கிங், பயோ டிராக்கர், 2 பிபிஜி டேட்டா சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 மீட்டர்கள்) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த அமேஸ்பிட் ஜிடிஆர் 2 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சப்போர்ட் உள்ளது. பின்பு ப்ளூடூத் 5 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
மேஸ்பிட் ஜிடிஆர் 2 சாதனத்தில் 3ஜிபி மெமரி மற்றும் 471 எம்ஏஎச் பேட்டரி, மைக்ரோபோன் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களும் உள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை போன்று விரைவில் அதிநவீன ஸ்மார்ட் வாட்ச் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த அமேஸ்பிட் ஜிடிஆர் 2 சாதனம் ஆனது நல்ல வரவேற்பை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








