ஆப்பிள் வாட்ச் கூட தள்ளி தான் நிக்கனும் போல: அட்டகாச அம்சங்களுடன் Amazfit ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

|

அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சாவல் விடும் விதமாகப் பல அம்சங்களை ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச்

அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச்

முதலில் இப்போது அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 1.28-இன்ச் பிபிஐ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். மேலும் 416x416 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அலைமோதும் மக்கள் கூட்டம்: ரூ.11,999க்கு இந்தியாவில் அறிமுகமான 12 பேண்ட் Infinix 5G ஸ்மார்ட்போன்!அலைமோதும் மக்கள் கூட்டம்: ரூ.11,999க்கு இந்தியாவில் அறிமுகமான 12 பேண்ட் Infinix 5G ஸ்மார்ட்போன்!

 150-க்கும் அதிகமான பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள்

150-க்கும் அதிகமான பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள்

குறிப்பாக ஆண்ட்ராய்டு 7.0 அல்லது ஐஓஎஸ் 12.0 அல்லது அதற்கும் பின் வெளியான ஓஎஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்வாட் மாடலில் 150-க்கும் அதிகமான பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளது.

Samsung கிட்ட இருந்து இந்த 1 போனை மட்டும் வாங்கிடாதீங்க! ஒருவேளை ஏற்கனவே வாங்கிட்டா மனச தேத்திக்கோங்க!Samsung கிட்ட இருந்து இந்த 1 போனை மட்டும் வாங்கிடாதீங்க! ஒருவேளை ஏற்கனவே வாங்கிட்டா மனச தேத்திக்கோங்க!

ஹெல்த் ரிமைண்டர்கள்

ஹெல்த் ரிமைண்டர்கள்

இதுதவிர ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ், ஸ்லீப், பிரீதிங், மென்ஸ்டுரல் சைக்கிள் மற்றும் ஹெல்த் ரிமைண்டர்கள் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். மேலும் 6 செயற்கைக்கோள் பொசிஷனிங் சிஸ்டம்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச். எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

அப்புறம் என்ன Elon Musk ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே: டிம் குக் தெளிவாக சொல்லிட்டாரு.!அப்புறம் என்ன Elon Musk ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே: டிம் குக் தெளிவாக சொல்லிட்டாரு.!

உடற்பயிற்சி

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள செப் கோச் ஸ்மார்ட் கோச்சிங் அல்காரிதம் ஆனது மனிதர்களின் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி அனுபவம் உள்ளிட்டவைகளுகக்கு தகுந்தபடி பயிற்சி வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர செப் கோச் அல்காரிதம் பயனர் சோர்வு அடைவது கண்டறிந்து அதற்கு ஏற்ப உடற்பயிற்சியின் தீவிரத்தை மாற்றும் திறன் கொண்டுள்ளது.

Bluebugging Attack: மொபைல் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் ப்ளூபக்கிங்! தெரியாமல் கூட இதை செஞ்சிடாதீங்க!Bluebugging Attack: மொபைல் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் ப்ளூபக்கிங்! தெரியாமல் கூட இதை செஞ்சிடாதீங்க!

15 ராணுவ தர சோதனை

15 ராணுவ தர சோதனை

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பதிவாகும் உடற்பயிற்சி விவரங்களை ஸ்டார்வா, ஆப்பிள் ஹெல்த், கூகுள் ஃபிட், ரிலிவ், அடிடாஸ் ரன்னிங் ஆப் போன்றவைகளுடன் சின்க் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட் 15 மிலிட்டரி தர டெஸ்ட்களில் வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 15 ராணுவ தர சோதனைகளில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெற்றி பெற்று இருக்கிறது.

மனித மூளையில் பொருத்தும் சிப் தயார்! மனித குலத்துடன் விளையாட போகும் Elon Musk.. ரெடியா இருங்க?மனித மூளையில் பொருத்தும் சிப் தயார்! மனித குலத்துடன் விளையாட போகும் Elon Musk.. ரெடியா இருங்க?

 20 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் சஃபையர் க்ரிஸ்டல் கிலாஸ் ஸ்கிரீன், 20 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் பேண்ட் GPS டிராக்கிங் அம்சங்கள் உள்ளது. குறிப்பாக அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

 500 எம்ஏஎச் பேட்டரி வசதி

500 எம்ஏஎச் பேட்டரி வசதி

குறிப்பாக அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 14 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். பின்பு பேட்டரி சேவர் மோடில் 30 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என நிறுவனம் கூறுகிறது.

அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச்

டைட்டானியம் நிறத்தில் அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.44,999-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazfit Falcon Smartwatch, which passed 15 military grade tests, is launched in India: Specs, Features and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X