விலையும் ஒஸ்தி., அம்சமும் ஒஸ்தி- அன்பளிப்பா கொடுத்த அசந்துருவாங்க: அட்டகாச அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்!

|

ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச்களை புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்வாட்ச்களும் பல்வேறு தேவைகளுக்கு பிரதானமாக இருக்கிறது. அதன்படி அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட்ச் குறித்து பார்க்கலாம். அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.4,999 ஆக இருக்கிறது.

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ரூ.4,999-க்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆர்டிஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் 60-க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைமைகளோடு இது வருகிறது. அமேஸ்ஃபிட் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட்ச்சின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

1.20 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே அளவு

1.20 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே அளவு

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.20 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே அளவுடன் வருகிறது. 320x320 மற்றும் 2.5டி கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இது கைரேகை எதிர்ப்பு பூச்சுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் மனநிலை மற்றும் அதன் அலங்காரத்திற்கு ஏற்ப 50-க்கும் மேற்பட்ட வாட்ச் மேற்புற முகங்களை வழங்குகிறது. அமேஸ்ஃபிட் பயன்பாட்டின் மூலம் வாட்ச் முகத்தை எளிதில் தனிப்பயனாக்க மாற்றலாம்.

230 எம்ஏஎச் பேட்டரி

230 எம்ஏஎச் பேட்டரி

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ 5ஏடிஎம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 50 மீட்டர் வரை நீர் எதிர்ப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. அமேஸ்ஃபிட் பிப் யூ 230 எம்ஏஎச் பேட்டரியோடு இது வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணிநேரம் ஆகும். அதேபோல் ஒரே சார்ஜிங்கில் இது ஒன்பது நாட்கள்வரை இதன் ஆயுள் நீடிக்கும்.

நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங்

நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங்

ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5.0 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 5.0 அதற்கும் மேற்பட்ட ஆதரவு, ஐஓஎஸ் 10.0 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆதரவு சாதனங்களை இவற்றுடன் இணைக்கலாம். நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங் உள்ளிட்ட 60+ விளையாட்டு முறைகளுடன் இந்தி ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்போடு வருகிறது. தூக்க தர கண்காணிப்பு, ரத்த ஆக்ஸிஜன் அளவு சென்சார் ஆகிய பல்வேறு பிரத்யேக கண்காணிப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. துல்லியமான ஜிபிஎஸ் மற்றும் அலெக்சா கட்டமைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் ஆர்டிஓஎஸ் இயக்க முறை

ஸ்மார்ட்வாட்ச் ஆர்டிஓஎஸ் இயக்க முறை

ஸ்மார்ட்வாட்ச் ஆர்டிஓஎஸ் இயக்க முறைமையில் இயங்குகிறது. இணைக்கப்பட்ட சாதனங்களுடன் இதை தொடர்பு கொள்ள செப் பயன்பாட்டு முறையும் இதில் இருக்கிறது. பயோடிராகர் 2 பிபிஜி உயரியல் ஆப்டிகல் சென்சார், மைக்ரோஃபோன் மற்றும் முடுக்கம் சென்சார் உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. அழைப்பு, காலண்டர், மின்னஞ்சல் மற்றும் பிற ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட் அறிவிப்புகள் அம்சங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது.

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ

அமேஸ்ஃபிட் பிப் யூ ப்ரோ தனிப்பட்ட செயல்பாட்டு நுண்ணறிவு (பிஏஐ) சுகாதார மதிப்பீட்டுடன் இது ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த சாதனம் இதய ஆரோக்கியம், ஒட்டுமொத்த உடற்பயிற்சி குறித்த விவரங்களை வழங்கும். இதன் எடை 31 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Amazfit Bip u pro Smartwatch Now Available at Rs.4,999 in India With TFT Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X