Home
Gadgets

விரைவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்.!

அமேஸ்ஃபிட் நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அந்த ஸ்மார்ட் வாட்ச் ரூ.5000 விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ

அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ

விரைவில் வெளிவரும் புதிய அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.43-இன்ச் எச்டி டிஎப்டி எல்சிடி கலர் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை தேர்வுசெய்யும் வசதி, பில்ட்-இன் அலெக்சா, ஜிபிஎஸ், 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட், மியூசிக், அலாரம், நோட்டிபிகேஷன் என பல ஆதரவுகளுடன் புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப் யு ப்ரோ

மேலும் புதிய அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உடல்நலன் சார்ந்த விவரங்களை வழங்கும் வசதி உள்ளது. இது வாடிக்கையாளரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக டிராக் செய்து அதுபற்றிய தகவல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது பின்க், பிளாக் மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தககவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் 2e மற்றும் ஜி.டி.எஸ் 2e சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் 2e மற்றும் ஜி.டி.எஸ் 2e அம்சங்கள்

அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் 2e மற்றும் ஜி.டி.எஸ் 2e அம்சங்கள்

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e, 1.39' இன்ச் வட்ட AMOLED டிஸ்பிளே 454 x 454 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது, அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e, 1.65' இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே 348 x 442 பிக்சல்கள் மற்றும் 341 பிபி பிக்சல் அடர்த்தி கொண்டது. அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e 246 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரே சார்ஜில் 14 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரியை இது கொண்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e, 471 எம்ஏஎச் பேட்டரியை ஒரே சார்ஜில் 24 நாட்கள் வரை பேட்டரி ஆயுளைத் தருகிறது. ஸ்மார்ட்வாட்ச் இரண்டும் ஸ்லீப் மற்றும் ஆக்ட்டிவிட்டி கண்காணிப்புடன் வருகின்றது. இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு அம்சம் மற்றும் 24 மணி நேர இதயத் துடிப்பு கண்காணிப்புக்கு, பயோட்ராகர் பிபிஜி இதயத் துடிப்பு சென்சாரும் இதில் உள்ளது.

 NFC விருப்பம் இருக்கிறதா?

NFC விருப்பம் இருக்கிறதா?

இந்த இரண்டு புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களும் 5ATM சான்றிதழுடன் வருகிறது. அதாவது இவை 50 மீட்டர் ஆழம் வரை நீருக்குள் பாதுகாப்பாக இருக்கும் வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இவற்றில் 4 ஜிபி உள் சேமிப்பு, ஜி.பி.எஸ், மியூசிக் மற்றும் அழைப்புகளைப் பெறுவதற்கான ஆதரவு ஆகியவை உள்ளது. இத்துடன் புளூடூத் 5.0 LE, NFC, GPS மற்றும் GLONASS ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazfit Bip U Pro May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X