பட்ஜெட் விலையில் புத்தம் புதிய அமேஸ்பிட் வாட்ச் அறிமுகம்.!

|

ஹூவாமி நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஹூவாமி நிறுவனம் தனது புதிய அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் புத்தம் புதிய அமேஸ்பிட் வாட்ச் அறிமுகம்.!

குறிப்பாக இந்த அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலில் 1.43 இன்ச் கலர் டிஎப்டி டச் டிஸ்ப்ளே, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட், 9 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் ப்ளூடூத் மியூசிக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 60-க்கும் அதிக ஸ்போர்ட் மோட், ஹை-பிரெசிஷன் தொடர்ச்சியான இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் உடல்நலம் கண்டறியும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கண்டிப்பாக இந்த சாதனம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

பட்ஜெட் விலையில் புத்தம் புதிய அமேஸ்பிட் வாட்ச் அறிமுகம்.!

அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட்வாட்ச் ஸ்ட்ராப் இல்லாமல் வெறும் 19 கிராம் மட்டுமே எடையைக் கொண்டுள்ளது. அதேபோல், வாட்ச் ஸ்ட்ராப்புடன் சுமார் 31 கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது என்று ஹுவாமி தெரிவித்துள்ளது.

இந்த புதிய சாதனம் 2.5D கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. மேலும் அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட்வாட்ச் 250 எம்ஏஎச் பேட்டரியுடன் 9 நாட்கள் நீடித்து நிலைக்கும் ஆயுளுடன் வருகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சுருக்கமாக அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலின் அம்சங்கள்

1.43 இன்ச் 320x302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே

60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி

இதய துடிப்பு சென்சார்

மூச்சு பயிற்சி அம்சம்

நோட்டிபிகேஷன் வசதி

ப்ளூடூத் 5 எல்இ

மியூசிக் கண்ட்ரோல் வசதி

வாட்டர் ரெசிஸ்டண்ட்

225 எம்ஏஎச் பேட்டரி

பட்ஜெட் விலையில் புத்தம் புதிய அமேஸ்பிட் வாட்ச் அறிமுகம்.!

அசத்தலான அமேஸ்பிட் பிப் யு விலை ரூ.3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையின் போது ரூ.3499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazfit Bip U Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X