மிரட்டி விட்டாப்ல.. சிங்கிள் சார்ஜில் 20 நாட்கள் பேக்கப்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரேட்டிங் ஸ்மார்ட்வாட்ச்!
பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் குவாலிட்டியிலும் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் (Amazfit Bip Max) களமிறங்கி இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 20 நாட்களுக்கு பேக்கப், அமோலெட் டிஸ்பிளே, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் பட்ஜெட்டில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன. ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கும் பீச்சர்களை கூட பட்ஜெட் மாடலில் எதிர்பார்கிறார்கள். இவர்களுக்கு கொஞ்சம் ஓகேவான பட்ஜெட்டில் அமேஸ்ஃபிட் புதுப்புது மாடல்களை கொடுக்கிறது.

இதில் அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் களமிறக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே, கனெக்டிவிட்டி, பேட்டரி மட்டுமல்லாமல், ஹெல்த் டிராக்கர்கள் மற்றும் மானிட்டர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. பெரும்பாலான சென்சார்கள் மற்றும் பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் மாடல்களை ஒப்பிடுகையில் கம்மியான விலைக்கு கிடைக்கிறது.
அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் அம்சங்கள் (Amazfit Bip Max Specifications): பெரிய டிஸ்பிளே எதிர்பார்க்கும் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். 2.07 இன்ச் (432 x 514 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. குவாலிட்டியான மாடலாக இருப்பதால், டெம்ப்ர்டு கிளாஸ் (Tempered Glass) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆன்டி ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) கிடைக்கிறது. அவுட்டோரில் பயன்படுத்துவதற்கு ஏற்ப 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கொடுக்கிறது. இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரை இந்த அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் மாடல் கொடுத்துள்ளது.
ஜெப் ஓஎஸ் (Zepp OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 7.0 அல்லது அதற்கு மேல் ஓஎஸ் கொண்ட ஆண்ட்ராய்டு மாடல்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஜெப் ஓஎஸ் கிடைப்பதால், ஜெப் கோச் (Zepp Coach) கிடைக்கிறது. இதில் டிராக் ரன் மோட் (Track Run Mode), விர்ச்சுவல் பேசர் (Virtual Pacer) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களை பேக் செய்துள்ளது. 150 வொர்க்அவுட் மோட்கள் உள்ளன.
பயோடிராக்கர் 6.0 பிபிஜி சென்சார் (BioTracker 6.0 PPG) சென்சார் கிடைக்கிறது. ஆக்ஸிலரேஷன் (Acceleration), கைரோஸ்கோப் (Gyroscope), ஆம்பியன்ட் லைட் (Ambient Light) மற்றும் ஜியோமேக்னட்டிக் (Geomagnetic) சென்சார்கள் கிடைக்கின்றன. இந்த சென்சார்களுடன் 25 ஆக்டிவிட்டிகளை ஸ்மார்ட் ரிககனைசேஷன் (Smart Recognition) செய்யலாம்.
இதில் 8 ஸ்போர்ட்ஸ் மூவ்மெண்ட்களையும் டிடெக்ட் செய்து கொள்ளலாம். 24 மணி நேரமும் ஹார்ட் ரேட் மானிட்டர் கிடைக்கிறது. எஸ்பி2 மானிட்டர் கிடைக்கிறது. மேலும், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங், ஸ்லீப் மானிட்டரிங் உள்ளிட்டவை கிடைக்கின்றன. ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கிடைக்கிறது.
4 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆப்லைன் மியூசிக் மற்றும் மேப்களுக்காக கிடைக்கிறது. மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல் கிடைக்கிறது. கால் நோட்டிபிகேஷன், ஆப் நோட்டிபிகேஷன் உள்ளிட்டவை கிடைக்கிறது. 5ATM ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 50 மீட்டர்கள் வரையிலான ஆழத்தை தாக்குப்பிடிக்கும்.
550mAh பேட்டரியை இந்த அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் கொடுக்கிறது. இந்த பேட்டரியில் நார்மல் மோடில் 20 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஹெவி யூசேஜ் செய்தால் 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஜிபிஎஸ் மோடில் 40 மணி நேரங்களுக்கு கிடைக்கும். ரூ.10,999 ஆக விலை இருக்கிறது. அமேஸ்ஃபிட் மற்றும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications