இவரு வேற ரகம் போல.. AMOLED டிஸ்பிளே.. 340mAh பேட்டரி.. 5ATM ரேட்டிங்.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?
இன்-பில்ட் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, அமோலெட் டிஸ்பிளே, 5ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 340mAh பேட்டரி மட்டுமல்லாமல், பயோ டிராக்கர் மூலம் ஹெல்த் பீச்சர்கள் கொடுக்கும் அமேஸ்ஃபிட் பிப் 6 (Amazfit Bip 6) ஸ்மார்ட்வாட்ச் மாடலானது, இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த பெரும்பாலான கேட்ஜெட்ஸ் பிரியர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் மீது ஆர்வம் இருக்கிறது. இதனாலேயே புதுப்புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு களமிறக்கி வருகின்றன. இப்போது, அமேஸ்ஃபிட் நிறுவனம் பிரீமியம் பீச்சர்களுடன் இந்த அமேஸ்ஃபிட் பிப் 6 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

அமேஸ்ஃபிட் பிப் 6 அம்சங்கள் (Amazfit Bip 6 Specifications): இது பிரீமியம் மாடலாக இருப்பதால், டிசைன் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, ஹெல்த் மானிட்டர்கள் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியத்தை பார்க்க முடிகிறது. டிசைனை பார்க்கையில், இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்களுடன் அலுமினியம் அலாய் ஃபிரேம் (Aluminum Alloy Frame) உள்ளது.
டூயல் கன்ட்ரோல் பட்டன்கள் கிடைக்கின்றன. ஆகவே, ரோட்டேட்டிங் கிரவுண் எதிர்பார்க்க முடியாது. கர்வ்ட் டிசைனில் பாடி கிடைக்கிறது. இந்த பாடிக்கு 5ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 50 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குப்பிடிக்கும். ஸ்விம்மிங் மற்றும் வாட்டர் ஆக்டிவிட்டிகளை செய்வோருக்கு பக்கா டியூரபிலிட்டி கொடுக்கும் மாடலாக இருக்கிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, அவுட்டோரிலும் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 2,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.97 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 5ATM ரேட்டிங்குங்கு ஏற்ப ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) மட்டுமல்லாமல் டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass) கிடைக்கிறது.

முன்பே சொன்னதை போல மைக்ரோபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் கிடைப்பதால், ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. இதற்காக ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டியை இந்த அமேஸ்ஃபிட் பிப் 6 மாடல் கொடுக்கிறது. இதுபோக கால் நோட்டிபிகேஷன் (Call Notification) முதல் ஆப் நோட்டிபிகேஷன்கள் வரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அமேஸ்ஃபிட் பிப் 6 மாடலின் பின்பக்கம் பயோடிராக்கர் பிபிஜி சென்சார் (BioTracker PPG Sensor) கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் மாடல்களில் கிடைப்பதை போல ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் (Gyroscope), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஜியோமேக்னட்டிக் சென்சார் (Geomagnetic Sensor) உள்ளது.
ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி வருவதால், 5 சாட்டிலைட் போசிஷனிங் சிஸ்டம் சப்போர்ட் கிடைக்கிறது. சென்சார்கள் மூலம் ஹெல்த் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் வருகின்றன. ஆகவே, 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் (Stress Level Monitor) மானிட்டர் கிடைக்கிறது.
பேக்கப் பற்றி பார்க்கையில், 340mAh பேட்டரி மூலம் 14 நாட்கள் டைபிகல் மோடில் பேக்கப் கொடுக்கிறது. ஸ்டாண்ட்-பை மோடில் 26 நாட்களுக்கும் பேக்கப் கிடைக்கிறது. ஹெவி யூசேஜ் செய்தால் 6 நாட்கள் பேக்கப் கிடைக்கும். மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல், ஃபைண்ட் மை போன் போன்ற யூடிலிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன.
இந்த அமேஸ்ஃபிட் பிப் 6 மாடலில் பிளாக் (Black), சார்கோல் (Charcoal), ஸ்டோன் (Stone) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.7,999ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் அமேஃபிட் இந்தியா தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் பீச்சர்களை விரும்பினால், இதை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








