புரட்டிப்போடும் பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ்.. 340mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படியான விலையில் அமோலெட் டிஸ்பிளே, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 340mAh பேட்டரி, 14 நாட்கள் பேக்கப், பயோமெட்ரிக் சென்சார், ஏஐ அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் பிஐபி 6 (Amazfit Bip 6) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் பிஐபி 6 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அலுமினியம் அலாய் ஃபிரேம் மற்றும் ஃபைபர்-ரெயின்போர்ஸ்டு பாலிமர் மெட்டீரியல் கொண்ட பாடி கிடைக்கிறது. இதில் 2 கன்ட்ரோல் பட்டன்கள் இருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஏற்ப லிக்விட் சிலிகான் (Liquid Silicone) ஸ்ட்ராப் கிடைக்கிறது. பிளாக் (Black), சார்கோல் (Charcoal), ஸ்டோன் (Stone) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர் வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது.

அமேஸ்ஃபிட் பிஐபி 6 அம்சங்கள் (Amazfit Bip 6 Specifications): இந்த அமேஸ்ஃபிட் மாடலில் டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass) புரொடெக்சன் கொண்ட 1.97 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 302 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
பிரீமியம் மாடலாக இருப்பதால், ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) வருகிறது. இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 340mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 26 நாட்கள் (பேட்டரி சேவர் மோட்) பேக்கப் பெற்று கொள்ளலாம். அதேபோல 14 நாட்கள் பேக்கப் (டிபிகல் யூஸ் பேட்டரி லைப்), 6 நாட்கள் பேக்கப் (ஹெவி யூஸ் பேட்டரி லைப்) வருகிறது.
மேலும், ஜிபிஎஸ் மோடில் (GPS Mode) பயன்படுத்தினால், 32 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். பிபிஜி பயோமெட்ரிக் (PPG Biometric), கைரோஸ்கோப் (Gyroscope), ஆம்பியன்ட் லைட் (Ambient Light), ஜியோமேக்னட்டிக் (Geomagnetic) போன்ற பிரீமியம் சென்சார்கள் கிடைக்கின்றன. 5 சாட்டிலைட் போஷிசனிங் சிஸ்டம் வருகிறது.
ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டியுடன் ப்ளடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்காக இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜெப் ஆப் (Zepp App) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 140+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன.
ஜெப் கோச் (Zepp Coach) என்னும் விர்ச்சுவல் கோச் சப்போர்ட் கிடைக்கிறது. வொர்க்அவுட் டிவைஸ்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படி ஹார்ட் ரேட் பெல்ட், ரன்னிங் பவர் மீட்டர், சைக்கிளிங் பவர் மீட்டர், சைக்கிளிங் ஸ்பீடோமீட்டர் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஆப்பிள் ஹெல்த் (Apple Health) சப்போர்ட் உள்ளது.
5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், ஸ்விம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹெல்த் பீச்சர்களை பார்க்கையில், ஹார்ட் ரேட் (Heart Rate), பிளட் ஆக்ஸிஜன் லெவல் (Blood Oxygen Level) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் (Stress Level) மானிட்டர் கிடைக்கிறது. மேலும், மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Menstrual Cycle Tracking) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
ஜெப் ஃப்ளோவ் (Zepp Flow) ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. மியூசிக், கேமரா கன்ட்ரோல், எஸ்எம்எஸ், கால் நோட்டிபிகேஷன், குயிக் ரிப்ளை போன்ற ஸ்மார்ட்போன் அசிஸ்டன்ட் பீச்சர்கள் கிடைக்கின்றன. ரூ.6,835 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. யுஎஸ் மார்கெட்டில் முதலில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.
Image Credits: Amazfit Blog


Click it and Unblock the Notifications








