70 மினி ஆப்ஸ்.. 26 நாள் பேட்டரி ஆயுள்.. நினைச்சு பார்க்காத அம்சத்துடன் Smartwatch.. எந்த பிராண்ட்? என்ன விலை?
அமேஸ்ஃபிட் (Amazfit) பிராண்ட் இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனமான அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) என்ற அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழுவிபர தகவலை இப்போது பார்க்கலாம்.
அமேஸ்ஃபிட் நிறுவனம் கடந்த வருடம் அமேஸ்ஃபிட் பிப் 5 என்ற ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) சாதனம் மிரட்டலான ஸ்மார்ட் அம்சங்களை ஒரே ஸ்மார்ட்வாட்சில் பேக் செய்துள்ளது.

அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity):
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப்போகிறது என்பதை விபரமாக இப்போது பார்க்கலாம். அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) டிவைஸ் 1.91" இன்ச் அளவு கொண்ட 320 x 380 பிக்சல் தீர்மானம் கொண்ட எல்சிடி டிஸ்பிளேவை (LCD display) கொண்டுள்ளது. இது 2.5D டெம்பர்ட் கிளாஸ் + ஆன்டி-பின்கரிங் கோட்டிங் உடன் வருகிறது.
ப்ளூடூத் 5.2 ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு (Android) போன் மாடல்கள் உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் இயங்குகிறது. ஐஓஎஸ் (iOS) 14.0 மற்றும் அதற்கு மேற்பட்ட ஐபோன் (iPhone) சாதனங்களுடன் இந்த அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஜெப் ஓஎஸ் 3.0 (Zepp OS 3.0) அம்சத்தையும் ஆதரிக்கிறது.
இந்த அம்சத்தின் மூலம் அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) பயனர்கள் சுமார் 70 மினி ஆப்ஸ்களை டவுன்லோடு (70+ Mini apps download) செய்து, இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக, இந்த புத்தம் புதிய அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி சாதனம் ப்ளூடூத் கால்லிங் (Bluetooth calling) அம்சத்துடன் வருகிறது.

அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி விலை (Amazfit Bip 5 Unity Price):
இதற்கென இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இன்பில்ட் மைக்ரோபோன் (in-bilt microphone) மற்றும் ஸ்பீக்கர் (speaker) ஆதரவை கொண்டுள்ளது. இது அமேசான் அலெக்ஸா ஆன்லைன் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Amazon Alexa online voice assistant) ஆதரவுடன் வருகிறது. இதில் பயோ ட்ராக்கர் 3 PPG பயோமெட்ரிக் சென்சார் (BioTracker 3 PPG biometric sensor) வழங்கப்பட்டுள்ளது. இது பிளட் ஆக்சிஜன் அம்சத்தை ஆதரிக்கிறது.
இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 24 மணிநேர ஹார்ட் ரேட் (24H Heart Rate) கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) அம்சம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இது தவிர இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் கேலண்டர் ரிமைண்டர் (calendar reminder), கால் நோட்டிபிகேஷன் (Call Notification) அம்சங்களை கொண்டுள்ளது.
இது மியூசிக் கண்ட்ரோல் (Music control) மற்றும் கேமரா கண்ட்ரோல் (camera control) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 300mAh பேட்டரி உடன் 11 நாள் வரை நீடிக்கும் ஆயுளை வழங்குகிறது. ஹெவி யூசேஜ் நேரத்தில் அதிகபச்சமாக 5 நாள் வரை இயங்குகிறது. பேட்டரி சேவர் மோடில் வைத்து இயக்கும் பொழுது இந்த அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) 26 நாட்கள் வரை செயல்படுகிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், இந்த அமேஸ்ஃபிட் பிப் 5 யூனிட்டி (Amazfit Bip 5 Unity) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்தியாவில் ரூ. 6,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








