Home
Gadgets

மிரண்டு போவீங்க.. AMOLED டிஸ்பிளே.. TOUCH ஸ்கிரீன்.. GPS கனெக்டிவிட்டி.. AI அசிஸ்டன்ட்.. எந்த வாட்ச்?

ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகராக அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, ஆன்டி கிளார் டச் ஸ்கிரீன் போன்றவை மட்டுமல்லாமல், ஹெல்த் மானிட்டர்கள், ஏஐ ஸ்போர்ட்ஸ் கோச் போன்ற அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் பேலன்ஸ் (Amazfit Balance) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

அமேஸ்ஃபிட் பேலன்ஸ் அம்சங்கள் (Amazfit Balance Specifications): இந்த அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.5 இன்ச் (480 × 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஸ்மார்ட்போனுக்கு நிகராக 323 பிபிஐ (PPI), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரண்டு போவீங்க.. TOUCH ஸ்கிரீன்.. GPS கனெக்டிவிட்டி.. எந்த வாட்ச்?

இதுவொரு டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்வாட்ச் (Touch Screen Smartwatch) என்பதால், டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass) கொண்டுள்ளது. அதோடு ஆன்டி-கிளார் கிளாஸ் பெசல் (Anti-glare Glass Bezel) மற்றும் ஆன்டி-பிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) கொண்டிருக்கிறது. பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் ரோட்டேஷனல் கிரவுண் மற்றும் ஃபங்ஸ்னல் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமேஸ்ஃபிட் பேலன்ஸ் வாட்ச்சின் ஹெல்த் டிராக்கிங் (Health Tracking) அம்சத்தை பொறுத்தவரை, பயோடிராக்கர் (BioTracker 5.0) பண்டில் வருகிறது. இதில் பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (PPG Biometric Sensor) மற்றும் பயோஎலக்ட்ரிக் இம்பிடன்ஸ் சென்சார் (Bioelectric Impedance Sensor) ஆகிவை அடங்குகிறது.

இதன் மூலம் பிளட்-ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங் (Blood-oxygen Level Monitoring), ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆக்விட்டி டிராக்கிங் (Sports Activity Tracking) செய்து கொள்ள முடிகிறது. அதேபோல ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) வருகிறது.

மிரண்டு போவீங்க.. TOUCH ஸ்கிரீன்.. GPS கனெக்டிவிட்டி.. எந்த வாட்ச்?

இந்த மாடலில் 150+ ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. ஜெப் கோச் (Zepp Coach) என்னும் ஏஐ வொர்க்அவுட் அசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜெப்ஓ எஸ் 3.0 (Zepp OS 3.0) வருகிறது. இதன் மூலம் ஜெப் ஆப் (Zepp App) பயன்படுத்திகொள்ளலாம். இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்டோர்களில் கிடைக்கிறது.

இந்த அமேஸ்ஃபிட் பேலன்ஸ் வாட்ச்சில் அக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), பாரோமெட்ரிக் அல்டிமீட்டர் (Barometric Altimeter), தெர்மோமீட்டர் (Thermometer) மற்றும் ஆம்பியன்ட் லைட் (Ambient Light Sensor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு லைனர் மோட்டார் (Linear Motor) வருகிறது.

இந்த மாடலின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஜிபிஎஸ் (GPS) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth: 5.0) ஆகியவை வருகின்றன. இந்த ஜிபிஎஸ் 6 சாட்டிலைட் போசிசனிங் சிஸ்டம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆஃப்லைன் மியூசிக் பிளேபேக் சப்போர்ட்டுக்காக 4 ஜிபி மெமரி வருகிறது. 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) மற்றும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் உள்ளது. இந்த மாடலில் 475mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி டைபிகல் மோடில் (Typical Mode) 14 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். அதேபோல பேட்டரி சேவர் மோடில் (Battery Saver Mode) 25 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

இந்த அமேஸ்ஃபிட் பேலன்ஸ் வாட்ச் சன்செட் கிரே (Sunset Grey) மற்றும் மிட் நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இவ்வளவு பிரீமியம் அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேஸ்ஃபிட் தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit Balance Smartwatch Sale From December 4 in India on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X