தலைவன் வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. 10ATM ரேட்டிங்.. GPS பில்ட்-இன்.. 21 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு ஏற்றபடியான பீச்சர்கள் மட்டுமல்லாமல் ரக்கடு லுக்கில் அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 (Amazfit Balance 2) மாடலானது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, பிபிஜி சென்சார், பிரீமியம் வொர்க்அவுட் மோட்கள், ஜெப் ஆப், 21 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மட்டுமல்லாமல், 10 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 அம்சங்கள் (Amazfit Balance 2 Specifications): இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 1.5 இன்ச் (480 x 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 323 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சப்பயர் கிளாஸ் (Sapphire Glass) டச் ஸ்கிரீன் கிடைக்கிறது.

21 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 658mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் ஹெவி யூசேஜ் மோடில் 10 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். அதேபோல ஜிபிஎஸ் மோடில் 33 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், பவர் சேவிங் ஜிபிஎஸ் மோடில் (Power Saving GPS Mode) 67 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது.
ஹெல்த் மானிட்டர்களுக்கு பயோடிராக்கர் 6.0 பிபிஜி (BioTracker 6.0 PPG) சென்சார் கிடைக்கிறது. மூவ்மெண்ட்களுக்கு ஆக்ஸிலரேஷன் (Acceleration) சென்சார், கைரோஸ்கோப் (Gyroscope) சென்சார், பாரோமெட்ரிக் (Barometric) சென்சார், ஆம்பியன்ட் லைட் (Ambient Light) சென்சார் மற்றும் ஜியோமேக்னடிக் (Geomagnetic) சென்சார் கிடைக்கிறது.
இதுபோக டெம்ப்ரேச்சர் (Temperature) சென்சார் வருகிறது. 170+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்மார்ட் ரிககனைசேஷனுடன் 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கிறது. இதுபோக ட்ரெயினிங் டெம்ப்லேட்கள் மற்றும் ட்ரெயினிங் மூவ்மெண்ட்கள் சப்போர்ட் கிடைக்கிறது. ரன்னிங்குக்கு பிரத்யேகமாக பீச்சர்களை கொடுக்கிறது.

இதில் டிராக் ரன் மோட் (Track Run Mode), விர்ச்சுவல் பேசர் (Virtual Pacer) மற்றும் ஸ்மார்ட் டிராஜெக்டரி கனெக்சன் (Smart Trajectory Correction) சப்போர்ட் கிடைக்கிறது. ஹார்ட் ரேட் பெல்ட், ரன்னிங் பவர் மீட்டர், சைக்கிளிங் பவர் மீட்டர், சைக்கிளிங் ஸ்பீடோமீட்டர் போன்ற வொர்க் அவுட் டிவைஸ்களுடன் இந்த அமேஸ்ஃபிட் மாடலை கனெக்ட் செய்யலாம்.
ஹெல்த் மானிட்டர்களை பார்க்கையில், ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் ஆகியவற்றுக்கு 24 மணி நேர மானிட்டரிங் (24 Hours Monitoring) கிடைக்கிறது. ஸ்லீப் குவாலிட்டி மானிட்டரிங் (Sleep Quality Monitoring), ஹெல்த் ரீமைண்டர்கள் (Health Reminders) மற்றும் ப்ரீதிங் எக்ஸர்சைஸ் (Breathing Exercise) கிடைக்கிறது.
மேலும், ஜிஎஸ்எஸ் லோகேஷன், ஜெப் ஃப்ளோவ் ஏஐ அசிஸ்டன்ட், ஸ்மார்ட்போன் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 மாடலை ஜெப் ஆப் (Zepp App) மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். அலுமினியம் அலாய், பாலிமர் பாடி மெட்டீரியல் கிடைக்கிறது. 2 பட்டன்கள், 2 மைக்குகள் மற்றும் 2 ஸ்பீக்கர்கள் உள்ளன.
அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 விலை (Amazfit Balance 2 Price): இந்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.25,790ஆக இருக்கிறது. இது குளோபல் மார்கெட்டின் விலையாகும். ஆகவே, அமெரிக்கா டாலரின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். சிலிகான் ஸ்ட்ராப் மற்றும் பிளாக் கலரில் வருகிறது.


Click it and Unblock the Notifications