சும்மா தெறிக்க விடுது.. 10ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்.. AMOLED டிஸ்பிளே.. 21 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 (Amazfit Balance 2) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் செக்மெண்ட்டில் கிடைப்பதால், அதற்கு ஏற்ப 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி மற்றும் 21 நாட்கள் பேக்கப் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஹார்ட் ரேட், ஸ்லீப் டிராக்கர் போன்ற பிரீமியம் ஹெல்த் பீச்சர்களும் உள்ளன.
இந்த அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 மாடலானது, ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. ரக்கட் மாடலுக்கு தேவையான டியூரபிலிட்டி மட்டுமல்லாமல், வாட்டர் ஸ்போர்ட்ஸ் மற்றும் வாட்டர் ஆக்டிவிட்டிகளுக்கு ஏற்ப ரெசிஸ்டன்ட் கொடுத்ததால், இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, வெளியாகிவிட்டது.

அமேசான் (Amazon), அமேஸ்ஃபிட் வெப்சைட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கும் கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக அதனுடைய பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இது மொத்தமாகவே அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுத்து இருப்பது தெரிகிறது.
அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 அம்சங்கள் (Amazfit Balance 2 Specifications): குவாலிட்டியை பார்க்கையில், ரக்கட் லுக்கில் அலுமினியம் அலாய் ஃபிரேம் மற்றும் ஃபைபர்-ரீபோர்ஸ்டு பாலிமர் (Fiber-reinforced Polymer) கேஸ் கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு சப்பயர் கிளாஸ் (Sapphire Glass) கிடைக்கிறது. இதுபோக 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
ஆகவே, 100 மீட்டர்கள் ஆழம் வரையில் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும். அதேபோல பில்ட் குவாலிட்டி அதிக டியூரபிலிட்டி கொடுக்கும். இந்த டிசைனில் 2 இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் லீனியர் மோட்டாரை பேக் செய்துள்ளது. அதேபோல இன்-பில்ட் மைக் கிடைக்கிறது. ஆகவே, ப்ளூடூத் காலிங் பீச்சர் பக்காவாக எதிர்பார்க்கலாம். வெறும் 43 கிராம் மட்டுமே எடை வருகிறது.
இந்த எடையிலும் 658mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரி மூலம் அதிகபட்சம் 21 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஹெவி யூசேஜ் செய்தால் 10 நாட்கள் மட்டுமே பேக்கப் கிடைக்கும். இதுவொரு டூயல்-பேண்ட் ஜிபிஎஸ் கொண்ட மாடலாகும். ஆகவே, ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால், 33 மணி நேரங்களுக்கு மட்டுமே பேக்கப் கிடைக்கும்.

இந்த அமேஸ்ஃபிட் பேலன்ஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்சில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.5 இன்ச் (480 x 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 323 பிபிஐ பிக்சல் டென்சிட்டி பெற்று கொள்ளலாம். பயோடிராக்கர் 6.0 (BioTracker 6.0) கிடைக்கிறது. இதில் பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (PPG Biometric Sensor) கிடைக்கிறது.
ஆகவே, 24 மணி நேரமும் ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங் (Blood Oxygen Level Monitoring) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் (Stress Level Monitoring) செய்து கொள்ளலாம். இதுபோக ஸ்லீப் ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Sleep Heart Rate Variability) மற்றும் ஸ்லீப் ஸ்டேஜஸ் (Sleep Stages) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Menstrual Cycle Tracking), ஆக்டிவிட்டி டிராக்கிங் (Activity Tracking) கிடைக்கிறது. 170+ ஸ்போர்ட்ஸ் மோட்கள், மூவ்மெண்ட் ரிககனைசேஷன் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. ஜெப் ஆப் மற்றும் ஜெப் ஏஐ அசிஸ்டன்ட் வருகிறது. ஜிபிஎஸ், ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி உள்ளது. ரூ.24,999ஆக விலை இருக்கிறது.


Click it and Unblock the Notifications








