மார்கெட் அதிருது.. விர்ச்சுவல் கோச்.. அமோலெட் டிஸ்பிளே.. பயோ டிராக்கர்.. ஜிபிஎஸ்.. எந்த மாடல்?
ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் அமோலெட் டிஸ்பிளே, பயோடிராக்கர் 3.0, சாட்டிலைட் போசிஷனிங் சிஸ்டம், செப் விர்ச்சுவல் கோச், மியூசிக் ஸ்டோரேஜ் போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்களை கொண்ட அமேஸ்ஃபிட் ஆக்டிவ் (Amazfit Active) பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
அமேஸ்ஃபிட் ஆக்டிவ் அம்சங்கள் (Amazfit Active Specifications): இந்த ஆக்டிவ் மாடலில் 1.75 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5D டெம்பர்ட் கிளாஸ் மற்றும் ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) சப்போர்ட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 (Android 7.0), ஐஓஎஸ் 14.0 (iOS 14.0) மற்றும் அதற்கு மேலான டிவைஸ்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மாடலில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டியோடு ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது.
அதோடு இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் (In-built Microphone & Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. அமேசான் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Amazon Alexa Voice Assistant) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் வேரியண்ட்டில் செப் ஓஎஸ் 2.0 (Zepp OS 2.0) வருகிறது.
பயோடிராக்கர் 3.0 (BioTracker 3.0) கொண்டுள்ளது. ஆகவே, பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (PPG Biometric Sensor) வருகிறது. அதேபோல ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), 3-ஆக்சிஸ் மோஷன் சென்சார் (3 Axis Motion Sensor) சென்சார் கொண்டிருககிறது. 4 சாட்டிலைட் போசிஷனிங் சிஸ்டம் (Satellite Positioning Systems) சப்போர்ட் உள்ளது.
இந்த சாட்டிலைட் சிஸ்டம் மூலமாக ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த மாடலில் செப் கோச் (Zepp Coach) என்னும் விர்ச்சுவல் சப்போர்ட் உள்ளது. ஆகவே, டிராக் ரன் மோட் (Track Run Mode), ஸ்மார்ட் டிராஜெக்டரி கரெக்சன் (Smart Trajectory Correction), விர்ச்சுவல் பேசர் (Virtual Pacer) சப்போர்ட் வருகிறது.

அதோடு ரேஸ் அச்சிவ்மெண்ட் பிரிடிக்சன்ஸ் (Race Achievement Predictions) கொண்டுள்ளது. ஹார்ட்ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor) வருகிறது. ஸ்மார்ட்போன் ஆப்ஸ் நோட்டிபிகேஷன்ஸ் (Smartphone Apps Notifications) சப்போர்ட் கொண்டுள்ளது.
அதோடு காலண்டர் ரீமைண்டர் (Calendar Reminder), கால் நோட்டிபிகேஷன் (Call Notification), செடண்டரி ரீமைண்ட்கள் (Sedentary reminders) சப்போர்ட் கொண்டுள்ளது. மியூசிக் பிரியர்களுக்காக 250MB எம்பி3 ஸ்டோரேஜ் (MP3 Storage) கொண்டிருக்கிறது. அதோடு மியூசிக் கன்ட்ரோல் (Music Control) வருகிறது.
அதேபோல கேமரா கன்ட்ரோல் (Camera Control) உள்ளது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் வாட்ச்சில் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) வருகிறது. மொத்தமாக 24 கிராம் எடை கொண்டுள்ளது. 300mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி மூலம் ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 14 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ப்ளூடூத் காலிங் மோடில் 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. அதேபோல பேட்டரி சேவர் மோடில் (Battery Saver Mode) 30 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். மிட்நைட் பிளாக் (Midnight Black), பெட்டல் பிங்க் (Petal Pink) மற்றும் லாவெண்டர் பர்பிள் (Lavender Purple) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
கிட்டத்தட்ட அல்ட்ரா பிரீமியம் அம்சங்கள் அத்தனையும் கொண்டிருப்பதால், இதன் விலை ரூ.12,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா (Amazfit India) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆப்பிள், சாம்சங் போன்ற பிரீமியம் மாடல்களில் வரும் பெரும்பாலான அம்சங்கள் பட்ஜெட்டில் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








