வாங்குனா இப்படி ஒன்ன வாங்கனும்.. 2.5D AMOLED டிஸ்பிளே.. 25 நாட்கள் பேட்டரி.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. எந்த மாடல்?
அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியான அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் (Amazfit Active Max) மாடலுக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, இந்தியாவில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்குவார் (Amazfit Active 2 Square) ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்குவார் டிசைனில் கிளாசிக் லுக் கொடுத்ததால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும், பேட்டரி பேக்கப் 19 நாட்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஹெவி யூசேஜில் 10 நாட்களுக்கு மட்டுமே பேக்கப் கிடைத்தது.

இந்த நேரத்திலேயே யுஎஸ் மார்கெட்டில் 25 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படி அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கியது. மேலும், டிசைன் மற்றும் பீச்சர்களிலும் அப்கிரேட்கள் இருந்தன. ஆகவே, இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களிடையே இந்த மாடல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, அமேஸ்ஃபிட் நிறுவனமே அந்த மாடல் வெளியாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
சோஷியல் மீடியா தளங்களில் டீசரை வெளியிட்டு விரைவில் வெளியாக இருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. யுஎஸ் மார்கெட்டில் கிடைத்த அதே பீச்சர்கள் இந்திய வெர்ஷனில் இருக்கும். அதேபோல விலையும் அந்த மாடலுக்கு நிர்ணயிக்கப்பட்டதை போலவே இருக்கும். ஆகவே, அந்த பீச்சர்கள் மற்றும் விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் அம்சங்கள் (Amazfit Active Max Specifications): ஜெப் ஓஎஸ் 5 (Zepp OS 5) மற்றும் ஜெப் ப்ளோவ் ஏஐ வாய்ஸ் (Zepp Flow AI Voice) அசிஸ்டன்ட்டை இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. 1.5 இன்ச் (480 x 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 2.5டி டெம்பர்ட் கிளாஸ் கொடுத்துள்ளது.
ஆன்டி ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) கிடைக்கிறது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. ரவுண்ட் டயல் டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. ப்ளூடூத் 5.3 எல்இ (Bluetooth 5.3 LE) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. ஆகவே, ப்ளூடூத் காலிங் செய்து கொள்ளலாம். இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) கிடைக்கிறது.
ப்ளூடூத் கனெக்டிவிட்டி போக 5 சாட்டிலைட் போசிஷனிங் சிஸ்டம் கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கிடைத்துள்ளது. ஜெப் ஓஎஸ் கிடைப்பதால், ஜெப் கோச் (Zepp Coach), ஜெப் ரன்னிங் கோச் (Zepp Running Coach) கிடைக்கிறது. இதில் டிராக் ரன் மோட் (Track Run Mode), விர்ச்சுவல் பேசர் (Virtual Pacer) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
பயோடிராக்கர் 6.0 பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (BioTracker 6.0 PPG Biometric Sensor), டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), 3-ஆக்சிஸ் மோஷன் சென்சார் (3-axis Motion Sensor) உள்ளிட்ட பல்வேறு சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஹார்ட் ரேட், எஸ்பிஓ2, ஸ்கின் டெம்ப்ரேச்சர், ஸ்லீப்பிங் உள்ளிட்ட பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் வருகின்றன.
5 ஏடிஎம் (5ATM) வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 25 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 658mAh பேட்டரி கிடைக்கிறது. ஹெவி யூசேஜ் செய்தாலும் 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஜிபிஎஸ் மோடில் மட்டும் 22 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். கேமரா, மியூசிக் கன்ட்ரோல், ஆப் நோட்டிபிகேஷன் கிடைக்கிறது. யுஎஸ் மார்கெட்டில் ரூ.15,190 ஆக விலை உள்ளது. இந்தியாவில் இதே விலையில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








