Home
Gadgets

Amazfit அசத்தல்.. 25 நாள் பேட்டரி, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் புதிய Smartwatch அறிமுகம்.. என்ன விலை?

அமேஸ்ஃபிட் (Amazfit) நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸின் கீழ் லேட்டஸ்ட் மாடல் ஆக அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் (Amazfit Active Max) மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக சிங்கிள் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கிறது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் முக்கிய அம்சங்கள்: அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது வட்ட வடிவிலான கேஸை கொண்டுள்ளது. அதில் 1.5-இன்ச் AMOLED டிஸ்பிளே உள்ளது; அதே நேரத்தில் அலுமினிய பிரேமும் உள்ளது. அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஆனது 5ATM- ரேட்டிங் நீர் எதிர்ப்பையும் வழங்குகிறது.

Amazfit அசத்தல்.. 25 நாள் பேட்டரி, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ்!

மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலின் டிஸ்பிளேவை சுற்றி ஒரு ரோட்டார் மோட்டாரும் உள்ளது. இது வலது பக்கத்தில் இரண்டு நேவிகேஷன் பட்டன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது 658mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வழக்கமான பயன்பாட்டுடன் 25 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும்.

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் விரிவான அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஒரு சர்குலர் டயலை கொண்டுள்ளது, இதில் 1.5-இன்ச் (480x480 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 3,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 323ppi பிக்சல் அடர்த்தி, வலுவூட்டப்பட்ட கிளாஸ் மற்றும் ஆண்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் ஆகியவைகள் உள்ளன.

இது ஒரு அலுமினிய பிரேமை பெறுகிறது, மேலே ஒரு ரோட்டார் மோட்டார் உள்ளது. இது வலது பக்கத்தில் இரண்டு நேவிகேஷன் பட்டன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் நீர் எதிர்ப்பிற்காக 5ATM மதிப்பீட்டை கொண்டுள்ளது.

அமேஸ்ஃபிட்டின் புதிய ஆக்டிவ் மேக்ஸ் ஆனது 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த-ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பு, மன அழுத்த அளவை கண்காணித்தல் மற்றும் தோல் வெப்பநிலை (தெர்மோமீட்டர்) கண்காணிப்பு உள்ளிட்ட சுகாதார கண்காணிப்பு அம்சங்களுக்காக பயோட்ராக்கர் PPG பயோமெட்ரிக் சென்சாரையும் பெறுகிறது.

மேலும், ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் தூக்க-இதய துடிப்பு மாறுபாடு, தூக்க நிலைகள், பகல்நேர தூக்கங்கள், தூக்க அட்டவணை மற்றும் தூக்க சுவாசத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தூக்க மதிப்பெண்ணை வழங்க தூக்க தர கண்காணிப்பைக் கொண்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் விலை, விற்பனை விவரங்கள்: இந்தியாவில், அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸின் விலை ரூ.15,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அலுமினிய பிரேம் உடன் சிங்கிள் கஃபிலாக் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் தற்போது அமேஸ்ஃபிட் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி (HMD) நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது எச்எம்டி வாட்ச் X1 மற்றும் எச்எம்டி வாட்ச் P1 மாடல்கள் ஆகும். இரண்டுமே அட்வான்ஸ்டு ஸ்மார்ட்வாட்ச் அம்சங்களை விட பேஸிக் ஆன பிட்னஸ் கண்காணிப்பு மற்றும் நீண்ட பேட்டரி லைஃப்பில் கவனம் செலுத்துகின்றன

எச்எம்டி நிறுவனத்தின் இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களுமே GPS அல்லது NFC-ஐ ஆதரிக்கவில்லை, அதாவது செயல்பாடுகளை வெளியில் சுயாதீனமாக கண்காணிக்க முடியாது. பெரும்பாலும் பல அம்சங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படுவதை பெரிதும் நம்பியிருக்கின்றன. மேலும் இன்னுமும் இந்த இரண்டு மாடலுக்கும் விலை நிர்ணயம் அல்லது வெளியீட்டு காலக்கெடுவை எச்எம்டி இன்னும் அறிவிக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit Active Max smartwatch with 25 days battery life 5ATM water resistance launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X